Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

nalini

ஆன்மீக நகரமான காஞ்சிபுரத்தின் மேற்கு ராஜ வீதியில், புகழ் பெற்ற சங்கர மடத்திற்கு நேர் எதிரே ‘ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம்’ என்ற ஆன்மீகச் சாதனங்களுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனையகம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. இதன் கோலாகலத் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பழம்பெரும் திரைப்பட நடிகை நளினி, புதிய விற்பனை நிலையத்தை முறைப்படி திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

பக்தர்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில், கலைநயம் மிக்க தெய்வீகச் சிலைகள், பாரம்பரிய வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் வரவிருக்கும் நவராத்திரி விழாவை முன்னிட்டு விதவிதமான பிரத்யேகக் கொலு பொம்மைகள் எனப் பெருமளவிலான பொருட்கள் கண்கவர் முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை நளினி: நேபாளத்தில் ஏற்படவிருக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து நமது பஞ்சாங்கத்திலேயே முன்னரே கணித்துக் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், இதுபோன்ற எச்சரிக்கைகளை அறிந்து விழிப்புடன் செயல்பட முடியும். எனவே அனைவரும் தினமும் சிறிதளவாவது பஞ்சாங்கத்தைப் வாசிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்க  ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறிய 4 சிறுமிகள்… விடாத 53 வயது மத போதகர்.. நெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago