https://republictn.com/

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை சரண்டர் செய்யக் கூடாது என்றும், 152 மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு மருத்துவர்கள் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் சேரும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைக்காததே இந்த உத்தரவுக்குக் காரணம் எனவும் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு போதுமான அளவில் வாதிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது திமுக அரசு வெற்றிகரமாக வாதிட்டு, 152 இடங்களைத் தக்க வைத்ததாகவும் தனது கடிதத்தில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்வதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago