Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் வைகநல்லூர் பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில், சிறுமியின் உறவினரால் ஒருவர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகநல்லூர் அருகே குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், தற்போது சத்தியமங்கலம் பகுதியில் உள்ள குண்டாங்கல் பாறை பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரது மகன் ரவி. ரவியின் 4 வயது மகளை குட்டப்பட்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் விட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் விஜய் என்பவர், சிறுமியை பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், சிறுமியை பாட்டி வீட்டில் விடாமல் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதன் பின்னர், சிறுமி பாட்டி வீட்டில் அழுது கொண்டிருந்ததாகவும், இதுகுறித்து அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமிக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதையும் படியுங்க  #GenZ_DMK: அறிவாலயத்தை அதிரவைத்த 2K கிட்ஸ்... கொள்கை மாறா டிஜிட்டல் படை... இனி ஆட்டம் வேற மாதிரி ஆரம்பம்!

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபரை சிறுமியின் உறவினர்கள் தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குளித்தலை பகுதியில் திருச்சி பிரதான சாலையில் மாணிக்கம் என்பவரை ஒருவர் கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில், மாணிக்கம் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது கை, கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் நான்கு இடங்களில் காயமடைந்த அவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமிக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் உண்மை நிலவரம், அதில் தொடர்புடையவர்கள் மற்றும் அரிவாள் தாக்குதலுக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிலை குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  இந்த அழகுதானே காரணம்..! காதலியின் முகத்தை கல்லால் சிதைத்த கொடூர காதலன்..!

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஆத்திரம் மற்றும் பழிவாங்கும் நோக்கில் இந்த அரிவாள் தாக்குதல் நடைபெற்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 minutes ago at 48 minutes ago