Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

R.S.Bharathi

திமுகவுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபம் விட்டடது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சைதாப்போட்டை தொகுதியில் கலைஞர் செஞ்சத மாதிரி யாரும் செய்யவே இல்லை. அந்த ஹாஸ்பிட்டல்ல போய் வந்த நோயாளி, உன் சொந்தக்காரன் ஓட்டு. அவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது. ஓப்பனா சொல்லுகிறேன். ”1996ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனைகளை சாதித்தீர்களே.. தோற்றுவிட்டீர்களே.. என்று சொன்னபோது தலைவர் கலைஞர் மிகுந்த உற்சாகத்தோடு இடத்திலே சொன்னார். ”அடுத்த தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்பொழுதுதான் இன்று முதல் நாங்கள் வாய்க்கால் வெட்டி கொண்டிருக்கிறோம். வாய்க்கால் வெட்டிவிட்டால் தண்ணீர் தானாக வரும் ஆக ஐந்தாண்டு காலம் கழித்து தண்ணீர் வரும். இந்த நாங்கள் வெட்டுகிற இந்த பாதையிலே வரும்” என்று அன்றைக்கு கலைஞர் சொன்னார். தளபதியிடத்திலே சொன்னார். அதையேதான் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

இதையும் படியுங்க  தம்பி உதயநிதிக்கு நன்றி கூறி விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு!"

இது ஒன்னும் இடையில ஒரு ஸ்டாப் அரேஞ்மெண்ட். இதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இங்க கூட பிரபாகர் ராஜா பேசினார். வீட்டு வரிகள் ஏறி போச்சு என்றார். அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை? ரொம்ப அக்கறையா பேசுறீங்க? இனிமேல் தயவுசெய்து மூடிட்டு சும்மா இருங்க. நமக்கு என்ன? ஓட்டு போட்டவன் அவனா பார்த்து ரோட்டுக்கு வந்து அவன் தலையில ஒரு மணி நேரம் கண்ணல பட்டால்தான் இந்த சமுதாயத்துக்கு புத்தி வரும். யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஏர் கண்டிஷன் பஸ் ஸ்டாப் அமைத்து கொடுத்திருப்பார்களா? ஏர் கண்டிஷன் பஸ் ஸ்டாப் கட்டிக் கொடுத்தது திமுக.

ஆக இனிமேல் பட்டாவது மக்கள் உணர்வார்கள். கட்சி வரலாறு என்ன? திமுக என்றால் என்ன? பெரியார் என்றால் என்ன? 100 வருஷத்துக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது? இன்னைக்கு மேடையில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்க யாரு காரணம்? 100 அடி தூரத்துல நின்றவர்களை உட்கார வச்சு உங்களுக்கு சீட்டு கொடுத்து, உங்களுக்கு மரியாதை கொடுத்தது யாரு? என்பதை சொல்லுங்க. அப்பதான் புத்தி வரும்.

இதையும் படியுங்க  "விஜயிடம் ரூ.50 கோடி வாங்கினேனா..? நரம்பில்லாத நாக்கு..! திமுக-வுக்கு வைகோ மறைமுக எச்சரிக்கை..!

காரணம் என்னவென்று கேட்டால் அவன் யார் என்று அவனுக்கு சொல்லாத காரணம். அவனை கேட்காதே. நீ போய் சொல்லு. சைதாப்பேட்டை தொகுதியில் அவர் செஞ்சத மாதிரி யாரும் செய்வே இல்லை. இங்கே ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் கொண்டு வர முடியல. ஏன்னா எங்க பக்கத்துல இருக்கற ஆலந்தூரில் பெரிய வசதிய இருக்கு. அந்த ஹாஸ்பிட்டல்ல போய் வந்த நோயாளி அவன் சொந்தக்காரன் ஓட்டு. அவனுக்குல்லாம் நல்ல சாவே வராதுன்னு ஓப்பனா சொல்லுங்க.

உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரை காத்திருப்பாரு. எத்தனை பேர் பேருக்கு உயிர் கொடுத்தார். கேன்சர் இன்ஸ்டிடியூட் கொடுத்தார்.” எனப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago