Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

”லஞ்சம் இல்லா தமிழகம் படைப்போம்” என்று சூளுரைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி, தனது முதல் ஆண்டிலேயே மிகப்பெரும் நம்பிக்கைச் சரிவைச் சந்தித்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை முதல் சார்-பதிவாளர் அலுவலகம் வரை ‘கைநீட்ட மாட்டோம்’ என்று அரசு மார்தட்டிக் கொண்டிருக்க, கள நிலவரமோ தலைகீழாக இருக்கிறது என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நேற்று நடந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சங்க நிர்வாகிகள் – பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிதான் இந்த வெடிகுண்டு வெடித்த மேடை. கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஹென்றி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தவர், தமிழக அரசின் ஊழல் முகத்தை உரித்துக் காட்டியிருக்கிறார்.

”பேய் போய் காட்டேரி வந்த கதை!”

இதையும் படியுங்க  மீண்டும் திமுகவுக்கு தாவும் நாஞ்சில் சம்பத்..!? தவெகவுக்கு குட் பை..! பதவி ஆசை காட்டி ஏமாற்றிய விஜய்..!

செய்தியாளர்களிடம் பேசிய ஹென்றி, ”பத்திரப்பதிவுத் துறையில் கடந்த தி.மு.க ஆட்சியில் பேய் போல லஞ்சம் வாங்கினார்கள். வெளிப்படையாகக் கேட்டு வாங்கினார்கள். இப்போது த.வெ.க ஆட்சியில் காட்டேரி போல லஞ்சம் வாங்குகிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். இதற்குப் பெயர் ஸ்மார்ட் கரப்ஷன்!” என்று போட்டு உடைத்தார்.

மேலும் பேசியவர், ”பத்திரப்பதிவுக்காகக் கொண்டு வரப்படும் கோப்புகள் எந்தவித உரிய காரணமும் இல்லாமல் நாள் கணக்கில் ஒத்திவைக்கப்படுகின்றன. அதிகாரிகள் யாரும் நேரடியாக லஞ்சம் கேட்பதில்லை. ஆனால், மக்களே வேறு வழியின்றி ‘ஐயா… இந்தாங்க’ என்று கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கேட்காமலே கொடுக்க வைப்பதுதான் இந்த அரசின் சாதனையா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கையில் இருந்தும்…

”ஒரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு ‘பிடிப்போம்’ என்கிறார்கள். இன்னொரு பக்கம் தினந்தோறும் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால், ‘லஞ்சமில்லா நிர்வாகம்’ என்பது வெறும் விளம்பரமா?” என்றும் அவர் சாடினார்.

இதையும் படியுங்க  Our commitment to customer service means that our friendly and

கிராமப்புற மனைப்பிரிவுகள் குறித்தும் அவர் பேசினார். ”கிராமங்களில் உருவாகும் லே-அவுட்டுகளை நகர்ப்புறத்துக்கு இணையாக டெவலப் செய்வதாகக் கூறி, செயற்கையாக விலைவாசியை ஏற்றுகிறார்கள். இதனால் சாமானியன் வீட்டு மனை வாங்க முடியாமல் தவிக்கிறான். புரோக்கர்கள், அதிகாரிகள் கூட்டணியில் இந்த கொள்ளை நடக்கிறது” என்றார் வேதனையுடன்.

இறுதியாக எச்சரிக்கை விடுத்த ஹென்றி, ”பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த ஸ்மார்ட் கரப்ஷனை அரசு உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும். காரணமின்றி கோப்புகளை நிலுவையில் வைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் தழுவிய மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்துவோம்” என்று அறிவித்துவிட்டுச் சென்றார்.

பண்ருட்டியில் வெடித்த இந்தப் புகார், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பேய்’ ஆட்சி போய் ‘காட்டேரி’ ஆட்சி வந்திருக்கிறதா என்று பொதுமக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago