தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆகையால் இதில், பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து ஜெகதீஸ்வரி காரில் வந்துள்ளார். அரசு வாகனத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி வருகை தந்த நிலையில், அவருக்கு பின்னால் ஒரு எஸ்காட் வாகனம் வந்துள்ளது.
அதற்கு பின்னால் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனமான மாருதி எர்டிகா காரும் பின்தொடர்ந்தது. மாருதி எர்டிகார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத ஹோண்டோ டியோ பைக்கில் வந்து கொண்டிருந்த இறையன்பு (26) என்ற இளைஞர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
