உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரங்களில் நிதினை வீட்டிற்கு வரவழைத்து அஞ்சு உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் நாளடைவில் கணவர் சுபம் வர்மாவுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அஞ்சு, தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வெடித்தது. உறவினர்கள் கண்டித்தும் பலனில்லாததால், சுபம் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கணவன், மனைவி மற்றும் காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுபம், “என் மனைவி என்னுடன் வாழ வேண்டும் அல்லது காதலனுடன் செல்ல வேண்டும்; இருவருடனும் சேர்ந்து வாழ முடியாது” எனக் கூறினார். ஆனால் அஞ்சுவோ, “எனக்கு கணவனும் வேண்டும், காதலனும் வேண்டும்; இருவருடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழவே ஆசைப்படுகிறேன்” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
போலீசார் மூவரிடமும் தனித்தனியாகப் பேசி உடன்பாட்டிற்கு வர முயன்றும், அஞ்சு தன் முடிவில் தீவிரமாக உறுதியாய் இருந்தார். பல மணி நேர தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்த தீர்வும் எட்டப்படாததால், வேறு வழியின்றி போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
