Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

murdermurder

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பசவேஷ்வர் நகரில் வசித்து வந்தவர் அபிநந்தன்(38). இவர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஹரினி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இந்த தம்பதிக்கு யதுவீர் (4) என்ற மகன் இருந்து வந்தார். இந்நிலையில்
கடந்த 16-ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அபிநந்தன் தனது மகன் யதுவீருடன் தனி ரூமில் படுத்திருந்தனர்.

மறுநாள் காலையில் அபிநந்தனும், அவரது 4 வயது மகன் யதுவீரும் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளனர். இதுதொடர்பாக மனைவி ஹரினி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் மனைவி ஹரினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  வழுக்கி விழுந்ததாக நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி..!

அதாவது ஹரினிக்கு, வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவர் அபிநந்தனுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிநந்தன். தனது மகன் யதுவீருடன் தனி அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது தனது கள்ளக்காதலன் வினயை நள்ளிரவில் செல்போன் மூலம் தொடர்பு ஹரினி நடந்த சம்பவத்தை கூறி வீட்டுக்கு வரழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து, அபிநந்தனை இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் 4 வயது சிறுவன் எழுந்ததால் வீட்டில் இருந்த தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹரினியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் வினய்யை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  "வீடா இது.. இல்ல குபேரன் கஜானாவா? பெரம்பூர் சொகுசு பங்களாவுக்குள் நுழைந்த போலீஸ்.. கண்ட அதிர்ச்சி காட்சி!"
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago