trisha vijay

தீபாவளி நேரத்தில் தமிழகம் முழுவதும் எழுத்தாளர் திரிஷா விஜய் யார்? என்கிற கேள்வி மூளை முடுக்கெல்லாம் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. திரிஷா யார் என்பது உலகிற்கே தெரியும். தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. விஜய் யார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அவரும் புகழ் பெற்ற சினிமா நடிகர், இன்றைய தமிழக முதல்வர். இவர்கள் இருவரது பெயரையும் இணைத்து புனைப்பெயராக பயன்படுத்தி யாரோ ஒரு புண்ணிவான் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அதுமட்டுமா? அதை அரசிடமே விற்கவும் செய்திருக்கிறார். திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை செய்தது திமுக என தவெகவும், தவெகதான் ஊழல் செய்தது என திமுகவும் கூறி வருகின்றனர். ஊழல் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த விவகாரத்தில் அதிகாரத்தின் நிழலில் என்கிற ஒரு புத்தகம் மேலும் ஒரு பிரளயத்தை உருவாக்கி இருக்கிறது.

இதையும் படியுங்க  "மத்திய அரசை அலறவிட்ட 3 சம்பவங்கள்! ராகுல் காந்தி வெளியிட்ட மாஸ் வீடியோ!"

காரணம் அதை எழுதியவர் எழுத்தாளர் திரிஷா விஜய். இவர் யார் என்று தற்போதுவரை தெரியவில்லை. பொதுவாக எழுத்தாளர்கள் ரொம்பவே சென்சிட்டிவ். தங்களது படைப்பு குறித்து விமர்சனம் வந்தால் கொந்தளித்து விடுவார்கள். ஆனால் இரண்டு நாட்களாக ஊர வைத்து துவைத்து எடுத்த பிறகும் எழுத்தாளர் திரிஷா விஜய் வெளியே வரவே இல்லை. அதுதான் பல சந்தேகங்களை எழுப்புகிறது. சரி இவரது புத்தகம் இந்தியாவில் புத்தகங்களுக்கு isBn வழங்கும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான அமைப்பான ராஜா ராம்மோகன்ராய் நேஷனல் ஏஜென்சி ஐஎஸ்பிஎன் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தோம்.

உலகில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வருகின்றன. புத்தகத்தை வேறொரு புத்தகத்தோடு குழப்பாமல் தனித்து அடையாளம் காட்ட இந்த 13 இலக்க ஐஎஸ்பிஎன் எண் பயன்படுகிறது. இதனை இலவசமாகவே பெறலாம்.
எழுத்தாளரோ, பதிப்பகத்தாரோ இதனை செய்வார்கள். இதனை செய்யும்போது ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை கொடுக்க வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் திரிஷா விஜய் எழுதிய புத்தகம் ராஜா ராம்மோகன்ராய் நேஷனல் ஏஜென்சி ஐஎஸ்பிஎன் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  “மக்கள் கடும் எச்சரிக்கை! TVK-வில் இணைந்த முன்னாள் MLA-க்கு எதிராக போஸ்டர் போர் வெடிப்பு!”

978937450824 என்கிற எண் அந்த புத்தகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு முறையாக விசாரித்தால் புகழ் பெற்ற இந்த எழுத்தாளர் விஜய் யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அதுமட்டுமல்ல பல முகம் தெரியாத எழுத்தாளர்களின் புத்தகங்களும் பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது தெரிகிறது. அது எப்படி நடந்தது? செய்தது யார் என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வியாக உள்ளது. சிக்கப்போவது தவெக-வா? திமுக-வா? யார் அந்த எழுத்தாளர் திரிஷா விஜய் என எழுந்திருக்கும் கேள்விகளுக்கு விரைவில் முடிவு தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *