Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இது முற்றிலும் போலியான வதந்தி என்று நடிகை யாஷிகா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார். இணையத்தில் பரவிய எடிட் செய்யப்பட்ட போலி ஸ்கிரீன்ஷாட் குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து தான் எந்தவொரு தவறான கருத்தையும் பதிவிடவில்லை என்று நடிகை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வதந்தியின் பின்னணி குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

யாஷிகா ஆனந்த் தனது கடற்கரை போட்டோஷூட் வீடியோ ஒன்றை அண்மையில் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், “இதற்கு முதல்வர் விஜய் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு யாஷிகா ஆனந்த், “அவர் த்ரிஷாவுடன் பிஸியாக இருப்பார்” என்று பதிலளித்ததாகக் கூறப்படும் ஒரு போலி ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் உருவாக்கப்பட்டு வைரலானது.

இதையும் படியுங்க  டெல்லியில் மோடி… சென்னையில் விஜய்… 'பெட்டிக்காக' அலறவிடும் ராம் சரணின் வியூகம்..!

இந்த போலி ஸ்கிரீன்ஷாட் வைரலானதைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மௌனம் கலைத்து விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் கற்பனையானதும், எடிட் செய்யப்பட்ட போலியான பதிவும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அத்தகைய எந்த கருத்தையும் பதிவிடவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவுவது தவறான தகவல் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட குழப்பத்துக்கு வருந்துவதாகவும், போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago