https://republictn.com/

நடிகை சினேகா, தனது கணவர் நடிகர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இன்று அவரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பார்க்கும்போது மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. சில தருணங்கள் நம்மை பேச முடியாத நிலைக்கு (Speechless) கொண்டு சென்றுவிடும்.

அவரின் இந்த உயர்வு மற்றும் அவர் பெற்றுள்ள மரியாதை மிகவும் ஊக்கமளிக்கிறது. இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும், எனக்கு தெரிந்த அதே அன்பான, எளிமையான, அடக்கமான மனிதராகவே அவர் இப்போதும் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், அவரது பணியில் கூடுதல் பலம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மற்றும் சினேகா இணைந்து நடித்த ‘வசீகரா’ (2003) திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின் 21 ஆண்டுகள் கழித்து, அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago