Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பான்-இந்தியா ஸ்டார் ‘மெகா பவர்ஸ்டார்’ ராம் சரண், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘பெட்டி’ திரைப்படத்தின் ப்ரோமோஷன்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, கோலிவுட் முதல் டோலிவுட் வரை கவனிக்க வைத்துள்ளது.

சென்னையில் நடந்த விழாவில் ராம் சரண் மைக் பிடித்துப் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திரையரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். அதற்குக் காரணம், அவர் விஜய் குறித்துப் பேசியதுதான். சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து, தனது முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகப் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ள விஜயை ராம் சரண் மனமாரப் பாராட்டினார்.

“இது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்றுத் தருணம்!” என்று சரண் உருகிப் பேசியது, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ராம் சரணின் இந்த ப்ரோமோஷன் ஸ்டைல் சாதாரணமானதாக இல்லை. அது ஒரு பக்கா ஸ்கெட்ச் என்கிறார்கள் சினிமா டிராக்கர்கள்.

இதையும் படியுங்க  “விஜய்க்கு இப்படி ஒரு பாராட்டா? சமுத்திரகனி அதிரடி பேச்சு

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மோடியை சந்தித்த அனுபவங்களை சரண் பகிர்ந்துகொண்டார். இதனால், வட இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பாஜக அமைப்பும், சினிமா வட்டாரங்களும் ‘பெட்டி’ படத்தின் மீது அதீத ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. வடக்கே மோடி என்றால், தெற்கே ‘முதலமைச்சர்’ விஜய் என ராம் சரண் காய் நகர்த்திய விதம், தமிழ்நாட்டு ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘பெட்டி’ திரைப்படம் அசுரத்தனமான ஓப்பனிங்கைப் பெற வேண்டும் என்பதில் படக்குழு தெளிவாக இருக்கிறது. அதற்கு, தற்போதைய இணையதள ட்ரெண்டிங் பெரும் பலமாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து ராம் சரணின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த டிஜிட்டல் ஹைப், தியேட்டர் முன்பதிவாக மாறினால், தமிழ்நாட்டில் ‘பெட்டி’ திரைப்படம் வசூல் சாதனை படைப்பது உறுதி என்கிறார்கள்..

இதையும் படியுங்க  "அதிகாலை 3:30 மணிக்கு கத்திப்பாராவில் நடந்தது என்ன? AR அமீன் கார் விபத்தின் பின்னணி.. வெளியான பரபரப்பு தகவல்கள்!"

இடத்திற்குத் தகுந்தாற்போல், ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து ராம் சரண் வீசும் ஒவ்வொரு பகடைக்காயும் ‘பெட்டி’ படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டி வருகிறது. டெல்லி முதல் சென்னை வரை அவர் அமைத்துள்ள இந்த வியூகக் கூட்டணி, ‘பெட்டி’ திரைப்படத்தை நாடு தழுவிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago