Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புதுச்சேரியில் வைகோ பங்கேற்ற விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து தான் பழைய நினைவுகளை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து தமிழக தமிழக முதலமைச்சரின் விஜயின் ஆட்சி பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அடுத்து வரும் பத்தாண்டுகளிலும் தொடரும். விஜய் கரூர் விவகாரத்தின் போது ஓடி வந்துவிட்டார். அன்று மனசாட்சி இல்லை. ஓடி வந்துவிட்டார். இன்று மனசாட்சி இருக்கிறது போய் பார்க்கிறார்.” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் இல்லையே? என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வைகோ,”நான் அவரிடம் பழகி இருக்கிறேன். நூற்றுக்கு நூறு இருக்கிறது. எந்த விதத்திலும் பாஜக- வின் இந்துவா கொள்கையை விஜய் ஆதரிக்கவில்லை. இதற்கு மாறாக மதசார்பின்மையை ஆதரிக்கிறார். சமூக நீதியை ஆதரிக்கிறார், ஜனநாயகத்தை ஆதரிக்கிறார், தனித்து நிற்கிறார்” என்று பதில் அளித்தார்..

இதையும் படியுங்க  தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்… ரேஷன் கார்டு ஓகேனா அடுத்தது ₹2500! விஜய் அரசின் அடுத்த மாஸ் அறிவிப்பு ரெடி!”

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு அவர் பதில் அளிக்க தயாராக இருந்தும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை கேள்வி கேட்க விடாமல் செய்தியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வைகோ செய்தியாளர் சந்திப்பில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago