Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் போலீஸ் மானிய கோரிக்கையில் முதலமைச்சர் விஜய் காவல்துறையினருக்கு அள்ளிக் கொடுப்பார். குறிப்பாக பெண் போலீசுக்கு மனம் குளிர அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். டூட்டியில் இருந்தாலும் பரவாயில்லை என சட்டப்பேரவு லைவ் நிகழ்ச்சியை உட்கார்ந்து வைத்த கண் வாங்காமல் மொபைலைப் பார்த்து கொண்டே ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள் போலீஸ் தரப்பினர்.

ஆனால், ”சர்க்காரியா கமிஷன் என்ன சொல்லிச்சு தெரியுமா? கருணாநிதி என்ன செஞ்சாரு தெரியுமா? எந்த கேஸ்ல நீங்க மிசாவுக்கு போனீங்கன்னு தெரியுமா? ரத்தீஸ் ஏன் துபாய்க்கு ஓடி போனாரு?” என அவர்கள் பஞ்சாயத்தையே பார்த்துவிட்டு கடைசியில் அவர்களுக்கான வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு போலீஸ்காரர்கள் ”அட போங்கயா இவரும் பழைய பஞ்சாங்கம் தான் பாடிட்டு இருக்காரு” என நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள்.

Vijay Annamalai

2026 தேர்தல்ல போலீசாரோட வாக்குகள் மொத்தமாக விஜய்க்கு தான் விழுந்தது. ஆனால் இப்போது இருக்கிற விஜயும் பழைய முதலமைச்சர்கள் மாதிரியே கடைசியில் நமக்கும் அல்வாதானா என்கிற ரேஞ்சுக்கு ட்ரீட் செய்கிறாரே? என்கிற வருத்தம் காக்கிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனால் கடுப்பாகி போன போலீஸ்காரர்கள் எல்லாம் அவர்களது வாட்ப் குரூப்களில் விஜய் அரசை வைத்து செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படியுங்க  விஜய் மீது பாய்கிறது சிபிஐ வழக்கு..? இடியை இறக்கிய அதிமுக எம்.பி..!

அதில் முக்கியமாக முன்னால் பாஜக மாநில தலைவரும், வீதலீடர் அமைப்பை நடத்தி வருபவருமான அண்ணாமலையை பற்றி ”நமக்கான தலைவர் யாருனு நாமதான் தப்பா கெஸ் பண்ணிட்டோம். இனி தலைவன் எவ்வழியோ நாமும் அவ்வழியே” என அண்ணாமலைக்கு இப்போது ஃபயர் விட ஆரம்பித்து இருக்கிறார்கள். அண்ணாமலை சமீபத்தில் கூட 1967ல் உணர்ச்சி நிலை மாற்றம் 2026ல மயக்க நிலை மாற்றம். ஆனால் 2031ல நம்மால் அறிவுநிலை மாற்றம் ஏற்படும் என தத்துவமாக பேசி இருந்தார். அதையெல்லாம் கேட்டுவிட்டு இப்போது ”ஆமாப்பா 2026ல நாங்க ஏதோ மயக்கத்தில தான் விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என போலீஸ்காரர்கள் இப்போது அண்ணாமலை பேச்சை ஆமோதிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை இந்த போலீசோட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் புரிந்து பேசுவதால் விஜயின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த போலீசார் இப்போது அண்ணாமலை பக்கம் மெல்ல மெல்ல சாய ஆரம்பித்து இருக்கிறார்கள். ”2026ல் இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டியே ஒன்னு டிவிகே இன்னொன்னு டிஎம்கே” என இருந்தது. ஆனால், ”2031ல் இரண்டு பேருக்கு இடையிலதான் போட்டியே. ”ஒன்னு விஜய், இன்னொன்னு அண்ணாமலை” என காவல்துறை தரப்பில் ரொம்ப ஸ்ட்ராங்காக நம்புகிறார்களாம்.

இதையும் படியுங்க  தவெக ஆட்சி அமைக்க உதவிய ஸ்டாலின்..! பதிலுக்கு விஜய் செய்த நன்றிக்கடன்..! ரகசிய பின்னணி..!

அதனால் 2026ல் விஜயை நம்பி ஏமாந்த தப்பை நாம மறுபடியும் பண்ணக்கூடாது. 2031ல அண்ணாமலையைதான் நாம தூக்கி கொண்டாடனும். அதை இப்ப இருந்தே ஸ்டார்ட் பண்ணனும் என போலீஸ் குரூப்களில் விவாதம் இப்போது அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago