Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்குத் தயாராகி வருகிறது. சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், ஞாயிறு அல்லது திங்கட்கிழமையன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு, தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார் விஜய்.

தவெக 107 இடங்களைக் கைப்பற்றியதுடன், காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஐ (M) 2, IUML 2 மற்றும் விசிக -2 ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றது. இதன் மூலம் இந்தக் கூட்டணியின் பலம் 120 சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் மு.க.ஸ்டாலின். அங்கு தவெக தங்களது வேட்பாளரை நிறுத்த வேண்டாம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (M) இந்திய முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகள் இதன் அடிப்படையிலும் விஜய்க்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  லயோலா மணிக்கு யாருமே எதிர்பாரா பவர்ஃபுல் அரசு பதவி..! CM விஜய் அதிரடி உத்தரவு

சிபிஐ, சிபிஐ (M) இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய்க்கு வெளியில் இருந்து மட்டுமே நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், திமுக பங்கேற்கும் போராட்டங்களில் கலந்து கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. திமுக கூட்டணிக்கட்சிகளை விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் காரணமாகவே இந்திய முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விஜய்க்கு ஆதரவளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago