Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

PLA

பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. பலூச் நடத்திய புதிய தாக்குதலில் குறைந்தது 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தும்ப் நகரின் மலாந்த் பகுதியில் ஒரு ராணுவ வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் படையைச் சேர்ந்த 14 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பலூச் கிளர்ச்சியாளர்கள் பலுசிஸ்தான் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த குவெட்டா-தஃப்தான் வர்த்தகப் பாதை, பலுசிஸ்தானின் பிற பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது தங்கள் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக பி.எல்.ஏ கூறியுள்ளது. தங்கள் போராளிகள் ஒரு பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை அழித்ததாகவும், பல சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து ஆயுதங்கள், உபகரணங்களைப் பறிமுதல் செய்ததாகவும் அந்தக் குழு கூறியுள்ளது. பலூச் மக்கள் பல முக்கிய வழித்தடங்களில் சாலைகளை அழித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் இராணுவம் சாலை வழியாகச் செல்வது கடினமாகியுள்ளது.

இதையும் படியுங்க  பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பது லாபமா..? நஷ்டமா..? சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா..!
Pakistan

பலூச் கிளர்ச்சியாளர்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். தங்கள் போராளிகள் பாகிஸ்தானிய பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றுவதாகவும், அழிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தவில்லை. கடந்த ஒரு மாதத்தில் பலூசிஸ்தானில் 14க்கும் மேற்பட்ட பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைத் தங்கள் போராளிகள் கைப்பற்றியுள்ளதாகவும் பி.எல்.ஏ. கூறியுள்ளது. மாகாணத்தில் பாகிஸ்தானிய இராணுவம், துணை இராணுவப் படைகளின் இருப்புக்கு எதிரான தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல்களை அந்த அமைப்பு கூறியுள்ளது.

கரானில் பல கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. பலூசிஸ்தானின் கரான் பகுதியில் பலூச் கிளர்ச்சியாளர்கள் பல கிலோமீட்டர் சாலைகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றன. கடந்த வாரம், இரண்டு தனித்தனி தாக்குதல்களில் 25 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மூன்று இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் பி.எல்.ஏ. கூறியிருந்தது.

பி.எல்.ஏ தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவ வீரர்களைக் குறிவைத்து வருகிறது. ஜியாரத் கிராஸில் ஒரு இராணுவ வாகன அணிவகுப்பை பதுங்கியிருந்து தாக்கியதாகவும், இரண்டாவது தாக்குதல் சுரப் பகுதியில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.எல்.ஏ. தெரிவித்த உயிரிழப்பு புள்ளிவிவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை. ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி முற்பகுதியிலும் பலுசிஸ்தானில் நடந்த ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. பலுச் தீவிரவாதிகள் பல மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு மையங்கள், காவல் நிலையங்கள், வங்கிகள், ரயில்வே உள்கட்டமைப்பு, பிற இடங்களைக் குறிவைத்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட பலுசியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்க  16 வருடங்களுக்குப் பிறகு உலகக்கோப்பை யுத்தம்: இந்திய ஹாக்கி அணியின் 10 ஆண்டு கால சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் உடைக்குமா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 minutes ago at 37 minutes ago