Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய தகவல் அரசியல், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் பல்வேறு அவதூறு செய்திகள் எதிர்க்கட்சிகளாலும், சமூக ஊடகங்களாலும் பரப்பப்பட்டு வந்தன. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்பட்டன. விஜயின் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, விஜய் – சங்கீதா தம்பதியினரிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், குடும்ப நலன் சார்ந்தும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இருவரிடமும் விரிவாகப் பேசி சமாதானம் செய்து வைத்ததாகத் தெரிகிறது.

இதையும் படியுங்க  "ஓடப்பார்த்த அனிதா ராதாகிருஷ்ணன்.. கையை பிடிச்சு காரில் ஏற்றிய போலீஸ்! ஆத்தூரில் நடுரோட்டில் நடந்த திக் திக் நிமிடங்கள்!"

இதன் தொடர்ச்சியாக, தற்போது சங்கீதா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த தம்பதியினர் ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாக தவெக மற்றும் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி, கடந்த சில மாதங்களாக நிலவி வந்த தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், தவெக தொண்டர்கள், ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago