தவெகவுக்கு ஆதரவாக சென்ற அதிமுகவினரின் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதன் பின்னணியில் ரூ.300 கோடி கைமாறி இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பகீர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சிக்கு திரும்பி வந்தவர்களின் பதவியை திருப்பி தர மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. புதிதாக பதவி போட்டு தந்திருக்கிறார். பழையவர்களுக்கு பதவி கொடுக்காமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது சர்வ வல்லமை படைத்த பொதுச் செயலாளருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் ஏன் லீமா ரோஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என நினைக்கிறீங்களா? மார்ட்டினிடம் ரூ.300 கோடி வாங்கி இருக்கிறார்.
ரூ.300 கோடி என்ன ஆதாரம் என கேட்பீர்கள். ரூ. 275 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக வங்கி மூலமாக அதிமுக கணக்கில் சென்று இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். ரூ.25 கோடி ரொக்கம். ரூ.275 கோடி மாட்டினின் பீயூச்சர் கேமிங் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தேர்தல் பத்திரங்களாக அதிமுகவுக்கு சென்றுள்ளது. அது லால்குடியில் வெறும் சீட்டுக்காக கொடுத்த 275 கோடி அல்ல. ஆட்சிக்கு வந்தவுடன் லாட்டரி தொழிலை திறந்து விடுகிறேன் என்று சொல்லி எடப்பாடி வாங்கியது.
லீமாரோஸை இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் நீக்கவில்லை என்பது புரிகிறதா? எடப்பாடி பழனிசாமி கட்சியை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார். லீமாரோஸ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். அதிமுகவை சேர்ந்த தோல்வி தழுவியவர்கள் மூன்று பேர் என்னை வந்து சந்தித்தார்கள். நாங்கள் 18 கோடி தேர்தலில் செலவு செய்தோம். எங்களுக்கு வழி தெரியவில்லை. அதில் 12 கோடி எனது பணம். 6 கோடி வட்டிக்கு வாங்கினேன். சீட்டு கொடுக்கும்போது பொதுச் செயலாளரை போய் பார்த்தேன். எவ்வளவு செலவு பண்ணுவீர்கள்? என்று கேட்டார். 10 செலவு செய்வோம் என்று சொன்னோம். 10 கோடியை இப்போதே கொடுத்தால் தான் சீட்டு என்று சொன்னார்.

தேர்தல் வந்தவுடன் அந்த 10 கோடி ரூபாய் உங்களுக்கு வரும் என்று சொன்னார். ஆனால் எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல் அந்த 10 கோடியை தரவில்லை. தேர்தல் சமயத்தில் நாங்கள் அந்த 10 கோடியை கேட்டோம். கொடுக்க முடியாது. ஆனால் நீங்கள் தான் மந்திரி என்று சொன்னார். எப்படி மந்திரி ஆகிவிடுவோம் என்பதால் வட்டிக்கு வாங்கி செலவு செய்தோம். மாதம் 25 லட்ச ரூபாய் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வழி தெரியவில்லை. தவெகவுக்கு சென்றால் சம்பாதிக்க முடியுமா? என்று என்னிடம் கேட்கிறார்கள். இதுபோல ஒவ்வொருவரும் கடனாளியாகி இருக்கிறார்கள்.
எல்லா கட்சியும் பணம் செலவழித்து இருக்கிறது. காசு கொடுக்காமல் ஜெயித்த ஒரே கட்சி தவெக மட்டும் தான். திமுகவுக்கு இணையாக அதிமுக வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள். அதிமுக வேட்பாளர்களின் கதி என்ன? இந்த கட்சி நல்லா இருக்கிறது. நாளைக்கு நல்லா இருப்போம் என்று நினைத்துதான் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் இருந்தார்கள். பெஞ்சமின் பதவியை பறித்தீர்கள். அவர் எம்எல்ஏ கிடையாது. அவர் எடப்பாடியிடம் கெஞ்சுகிறார். அவருக்கு அந்த கட்சிப் பதவியை கொடுத்தால் எடப்பாடிக்கு என்ன பிரச்சனை? எடப்பாடி பழனிச்சாமி, அவரது மைத்துனர் வெங்கடேஷ், மகன் மிதுன், மாப்பிள்ளை சதீஷ் இவர்கள் மட்டும் இருந்தால் கட்சியை வளர்த்து விடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்புகிறார்” எனக் கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க எங்களது வாட்ஸ் அப் சேனலின் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
