Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

களத்தில் இறங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசுக்கு, தொடர் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல்களும் அடுத்தடுத்துப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் ஒருபுறமிருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை, திருட்டு வழக்குகளில் சிக்குவது முதலமைச்சர் விஜய்யின் ‘தூய ஆட்சி’ முழக்கத்திற்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது

நடிகர் விஜய பதவி ஏற்ற முதல் கொலை, கொள்ளை‍‍, பாலியல் வன்கொடுமை, கரண்ட் கட், விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், குடிநீர் கேட்டு போராட்டம் போன்ற குற்றச்சாட்டுகளால் திணறி வருகிறார்

குறிப்பாகக் பாலியல் வழக்கு, திருட்டு வழக்குகளில், தவெக கட்சியினர், நிர்வாகிகளே தொடர்ந்து கைதாகி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மிஞ்சும் வகையில் சமீபத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சேலத்தில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகிகள் கைதாகி உள்ளனர். திருச்சியில் லேப்டாப் திருடிய மணிகண்டம் ஒன்றிய நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க  தவெக-வுக்கு கொள்கையும் இல்லை... கோட்பாடும் இல்லை..! - முத்தரசன் அதிரடி அட்டாக்..!

இந்த பிரளயங்கள் அடங்குவதற்குள், திருப்பத்தூர் அருகில் தவெக நிர்வாகி ஒருவர் கோவிலில் திருடி கையும் களவுமாக போலீஸில் சிக்கியிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயிலில் கட்டப்பட்டு வந்த வெண்கல மணிகள் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்டது. இதுகுறித்து சந்தேகமடைந்த கோயில் பூசாரி, பக்தர்கள் கண்காணித்து வந்த நிலையில், நேற்று இரவு ஸ்கூட்டரில் வந்த நபர் கோயில் வளாகத்தில் நுழைந்து, கட்டிங் பிளேடு, சுத்தியின் உதவியுடன் மணிகளை அகற்றி இருக்கிறார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, குரிசிலம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் “ஏ.எஸ். குமார் (48) என்பதும், அவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டியப்பனூர் ஊராட்சி கிளை” அமைப்பில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து கட்டிங் பிளேடு, சுத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கோயிலில் காணாமல் போன பித்தளை மணிகள் தொடர்பாகவும் போலீசார் இவரிடம் திவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  அய்யோ போச்சே... திமுகவால் நடுத் தெருவில் காங்கிரஸ்..! கதறும் தொண்டர்கள்… கொதிக்கும் ராகுல்!

கோயில் திருட்டு சம்பவத்தில் ஆளும் கட்சி நிர்வாகி சிக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago