Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TRISHA

தமிழக வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்றாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா பேரெழுச்சியோடு முழங்கியது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைவர் விஜய் முதன்முறையாக அங்கே கம்பீரமாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய அந்த தருணம், பல கோடி இதயங்களைச் சிலிர்க்க வைத்தது.

கம்பீரமாக ஒலித்த அணிவகுப்பு மரியாதைக்கு நடுவே, பார்வையாளர்கள் வரிசையில் ஒரு நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது. மகனின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீரும் பூரிப்புமாக அமர்ந்திருந்தனர் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா. அவர்களோடு இணைந்து, இந்த வரலாற்றுத் தருணத்திற்குச் சாட்சியாக நடிகை திரிஷா தனது தாயாருடன் பங்கேற்றுப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

அரங்கமே இந்த உன்னத நிகழ்வைக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், ஒரு சில அசைக்க முடியாத ஏக்கம் அனைவர் மனதிலும் மெலிதாக நிழலாடியது. தந்தையின் இந்த மாபெரும் சாதனையை நேரில் கண்டு மகிழ, பிள்ளைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா அங்கே இல்லையே என்ற ஆதங்கம் ஆதரவாளர்களின் பார்வையில் எட்டிப்பார்த்தது. ஏற்கனவே மே மாதம் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்வர் பதவியேற்பு விழாவிலும் அவர்கள் பங்கேற்காத நிலையில், இந்தச் சுதந்திர தின விழாவிலும் அவர்களின் வருகை இல்லாதது ஒரு மெல்லிய மௌனத்தையும் கேள்வியையும் ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க  அதிமுகவின் தலைவராகிறார் மிதுன்.?! ஓபனாக போட்டுடைத்த எடப்பாடி..!

மற்றொருபுறம், அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, சங்கீதா இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்று விஜய்க்குத் தோள் கொடுப்பார் என ரசிகர்கள் பேராவலோடு காத்திருந்தனர். ஆனால், அவரது வருகையும் நிகழாமல் போனது பலரது மனதை லேசாகக் கனக்கச் செய்தது.

குடும்பத்தின் சில முக்கிய முகங்களின் வருகை இல்லாத வலி ஒருபுறம் இருந்தாலும், ஒரு மகனாகத் தன் தாய்-தந்தையின் ஆசியோடும், நண்பர்களின் வாழ்த்தோடும் கோட்டை கொத்தளத்தில் விஜய் கொடியேற்றிய அந்தப் படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெறும் செய்தியாக மட்டுமில்லாமல், பலரின் உணர்வுகளைத் தொடும் ஒரு காவியப் பதிவாக வைரலாகி வருகிறது. குடும்பத்தினர் வராத சூழலில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தது தமிழக அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதையும் படியுங்க  "ரூ.3,600 கோடி டாஸ்மாக் டீலிங்… விடிந்ததும் பாய்ந்த புதிய FIR: செந்தில் பாலாஜி கோட்டையைச் சரிக்கும் DVAC புயல்!"

அரசு விழாவா அல்லது சொந்தக் குடும்ப விழாவா என்று மக்கள் அடுக்கடுக்கானக் கேள்விகளை எழுப்பி தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

பிள்ளைகளும் மனைவியும் புறக்கணித்த நிலையில், அதிகாரப்பூர்வ அரசுக் கொடியேற்ற நிகழ்வில் ஒரு நடிகைக்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது எனச் எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாகச் சாடி வருகின்றன.

இது குறித்து நெட்டிசன்கள் குதறியடித்து வருகின்றனர். ”விஜய் கொடி ஏத்த, த்ரிஷா சல்யூட் அடிக்க, த்ரிஷா அம்மா அத ரசிக்க..வாவ்..! இந்த கருமத்த பார்க்கவா சுபாஷ் சந்திரபோஸ் , வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாம் போர் செய்து போட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள்?” என ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார். ”தவெக 118 மெஜாரிட்டி வராததற்கும் த்ரிஷா தான் காரணம்” எனக் கூறியுள்ளார் ஒருவர்.

இதையும் படியுங்க  திமுகவுடன் அண்டர் டீலீங்க்… பிரான்ஸில் விஜய் மேனேஜர் 'ரூட்' ஜெகதீஷுடன் பேரம்..! அம்பலமான ரகசிய சந்திப்பு..!

”த்ரிஷாவால் இன்னிக்கு உன் அம்மாவ ஒருத்தன் தப்பா பேசுனதக்கூட கண்டிக்க முடியாம, ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சி சண்ட போட்டுக்கிட்டு இருக்கோம். புரியுதா..விளங்குதா..? நீ என்ன செய்றன்னு தெரியுதா..? இந்த மாதிரி ஒவ்வொன்னா நீ இழந்து ஒன்னுமே இல்லாம நிக்கப்போற..” என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் விஜய் ரசிகர் ஒருவர்.

”அன்று எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா… இன்று விஜய் – த்ரிஷா… வரலாறு திரும்புகிறதா?” என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ்தளப்பதிவில், ”தான் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் தனது மனைவி இராணியை அழைத்துப் போக மறுத்து, “கட்சிக்கும், குடும்பத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும்” என்றார் அறிஞர் அண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Mr.பழுவேட்டரையர் என்கிற எக்ஸ்தளக் கணக்கில், ”விஜய் அவர் வாழ்க்கைய சிறப்பா வாழ்ந்துட்டிருக்கார். கடந்த 26 வருடங்களாக அவர் வாழ்க்கைய அவர் செம்மையாக வாழும் போது, அவர் மனைவி, அவரின் பிள்ளைகளை வளர்த்து, ஹவுஸ் ஒய்ஃபா இருப்பாங்கலாம்.

இவர் அப்பறம் இன்னொருத்தி கூட கள்ள தொடர்பு வைத்து, அவ கூட வாழ போவாராம். இவர் மனைவியோ அவர்களின் 26 வருட கால வாழ்க்கையையும் இளமையையும் இவரிடம் தொலைச்சுட்டு, அவங்க மீதி காலத்தை ஏனோ தானோனு வாழனுமாம்..

த்ரிஷா அம்மையார், அவங்களும் அவங்க இஷ்டத்துக்கு அவங்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு, கடைசில இன்னொருத்தியின் புருஷனோட இப்படியே போயிடுவாங்கலாம்.. இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா.? கேவலம். உண்மையில் காறித் துப்பணும்” எனப்பதிவிட்டுள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 hours ago at 6 hours ago