Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

dhanush

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில், திரை உலகை சேர்ந்த மேலும் சில முன்னணி நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அந்த வகையில் நடிகை தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். தனுஷும் தமிழர் எழுச்சிக் கழகம் என்கிற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜன் பண்டிட் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. விஜய் தற்போது தேர்வு செய்துள்ள அரசியல் பாதை அவருக்கு வெற்றி தரும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2031ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தவெகவை எதிர்க்க திமுகவும், அதிமுகவும் ஒன்று சேரும் என்றும்; அதேநேரத்தில் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தவெகவுக்கு அவர்தான் முக்கிய எதிரியாக இருப்பார் என்றும் கணித்துள்ளார்.

இதையும் படியுங்க  திமுகவினரிடமே ஆட்டையைப்போட்ட செல்வப்பெருந்தகை..! ரெய்டு நாடகத்தின் பகீர் பின்னணி..!
Republic Tamil

2031ஆம் ஆண்டில் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய்க்கு தனுஷ்தான் போட்டியாக இருப்பார், நம்பர் இடத்திற்கு தனுஷ் போய்விடுவார். திமுக, அதிமுக இருக்காது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவரது (தனுஷின்) ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இதை சொல்கிறேன்” என்றார்.

விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் உதயநிதி ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இருந்திருக்கும் என்றும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக முதல்வராகும் யோகம் இல்லை என்றும் ரதன் பண்டிட் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அரசியலில் களம் இறங்கும் வேளையில் தமிழகத்தில் புதிய அரசியல் போட்டி உருவாகும் என்றும் ரதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

இருப்பினும் தனுஷின் அரசியல் வருகை விஜயின் அரசியல் பயணத்தை பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதை தாண்டி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அவரது அரசியல் வருகை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் ரதன் பண்டிட் இதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  பாஜகவின் மிகப்பெரிய தலையை தூக்கிய CM விஜய்..! பெரும் படையுடன் தவெக-வுக்கு படையெடுப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago