Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Modi

பல்லாயிரம் கோடிகளை இந்த அரசியல்வாதிகளும் பணமுதலைகளும் இப்படி பதுக்கி வைத்திருக்கிறார்களே.. இதெல்லாம் வெளியியே வராதா? 2016 வது வருஷம் நவம்பர் 8ட்டாம் தேதி ராத்திரி 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேரலை ஒளிபரப்பில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இன்று இரவு 12 மணியில் இருந்து, அதாவது நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து இந்தியாவில இதுவரைக்கும் புழக்கத்தில இருக்கிற அந்த
₹1000 நோட்டுகள் செல்லாது என்பதுதான் பிரதமர் மோடி வெளியிட்ட மிக பலத்த அதிர்ச்சி தரக்கூடிய அந்த
அறிவிப்பு.

பிரதமர் மோடி அறிவித்த நான்கே மணி நேரத்தில் இருந்து 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத வெறும்
காகிதங்களாக மாறிப்போனது. இது இந்தியாவோட பொருளாதாரத்தை சீர்குலைக்கிற வெளிநாட்டு சக்திகளோட சதியை முறியடிக்கிற அருமையான முயற்சி என பிரதமர் மோடிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்தியாவின் கருப்பு பணத்தை மீட்டெடுக்கிற முயற்சி ர்ன மோடியை பாராட்டினார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த நடவடிக்கையால் பல அப்பாவி மக்கள் தங்களிடம் இருக்கிற அந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை பேங்கில் கொடுத்து மாற்றுவதற்காக வரிசையில் நின்று இறந்து போன அசம்பாவிதங்களும் நடந்தது.

ஒரு பக்கம் பாராட்டு, இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனம் என மோடியின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை இருந்தது. இதோ 2026 நவம்பர் 8ஆம் தேதியோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கை
நடந்து சரியாக 10 வருஷங்கள் முடிகிறது. இந்த 10 வருஷத்தில் இந்தியாவோட கருப்பு பணம் ஒழிந்ததா? இந்தியாவோட பொருளாதாரம் சீரடைந்ததா? இந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மாற்றியதில் முழுமையான பலன் கிடைத்ததா? இந்த பல கேள்விகளுக்கு இன்னுமும் முழுமையான திருப்தியான பதில் கிடைக்கவே இல்லை

2016ல் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99% நோட்டுகள் பேங்க் வழியாக திரும்ப ரிசர்வ் பேங்குக்கே வந்து சேர்ந்து விட்டது. இருந்தாலும் இந்தியாவோட கருப்பு பணம் இன்னமும் முழுமையாக ஒளியவில்லை. அதற்கு மாறாக கருப்பு பணம் ரூபாய் நோட்டு வடிவங்கள் இல்லாமல் அடுத்தடுத்து அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக எங்கேயோ ஒரு பக்கம் போய்க்கொண்டுதான் இருக்கிறது. போலீசாரை விட திருடர்கள் டெக்னாலஜியில் ஒருபடி மேல் இருபது போல் இந்தியாவோட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கிற அதிகாரிகளை விட கருப்பு பணத்தை வைத்திருக்கிறவர்கள் மிக வேகமான நவீன டெக்னாலஜிக்குள் புகுந்து அடுத்த கட்டத்துக்கு போய் விட்டார்கள். இது சம்பந்தமாக பொருளாதார ஆய்வாளர்கள் சர்வதேசத்தின் நவீன கரன்சி நெட்வொர்க் பற்றி தெரிந்தவர்களிடம் பேசியபோது பல அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் கிடைத்தது.

10 வருஷத்துக்கு முன் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அதுக்கப்புறமா கருப்பு பண முதலைகள் உஷாராகி ரூபாய் நோட்டுகள் வடிவத்தில இல்லாம வேற வேற நவீன வடிவங்கள்ல கருப்பு பணத்தை சேமிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு இருக்கிற உச்சக்கட்ட அந்த வடிவம்தான் ஹார்ட்பவர்ட் பேலட். அதாவது கண்டெய்னர்கள்ல அடைச்சு வைக்கிற அளவுக்கு இருக்கிற ஒரு பணத்தை ஒரே ஒரு சின்ன பென்டிரைவ் மாதிரியான டிவைஸ்ல வச்சுக்க முடியும்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா நம்ம ஊரு ரியல் எஸ்டேட் அதிபர்களோ, இல்ல அரசியல்வாதிகளோ முன்னாடி எல்லாம் பீரோவுல கட்டுக்கட்டா 2000 நோட்டுகளை எல்லாம் அடுக்கி வைப்பாங்க. இல்லைன்னா பாத்ரூம்லயோ இல்ல தோட்டத்திலயோ பதுக்கி வைப்பாங்க. ஆனா இப்போ ஒரு பெரிய ரூம் நிரம்புற அளவுக்கு இருக்கிற கேஷ் கூட வெறும் நம்ம கட்டவிரல் அளவுல இருக்கக்கூடிய அந்த சின்ன ஹார்ட்வேர்ட் வாலட்டில் யூஎஸ்டிடியாவோ இல்ல கிரிப்டோ காயினாவோ மாத்தி போட்டு வச்சுக்க முடியும்.

இதையும் படியுங்க  பாஜகவின் மாஸ்டர் மூவ்..! திமுக- திரிணாமுல் ஆதரவு..! அடித்து ஆடும் அமித் ஷா..!

இப்ப உலகத்தோட அதிவேக கருப்பு பண கிரிப்டோ கரன்சி இப்படிதான் ஹார்ட்வர்ட் வாலட்டுக்குள்ள வைக்கப்படுது. இந்த ஹார்வர்ட் வாலட்ல முக்கியமான உலக புகழ் பெற்ற பிராண்டுகள் இருக்கு. இந்த பிரான்ஸ் நாட்டோட லெட்ஜர் செக்குடியரசு நாட்டோட ட்ரெசார் ஸ்விட்சர்லாந்தோட டெங்கம், சிங்கப்பூரோட சேப் பால், சீனாவோட கீஸ்டோன் அப்புறம் அமெரிக்காவோட கீப் கீ பவுண்டேஷன் இதெல்லாம் உலகம் பூரா புகழ் பெற்ற இந்த ஹார்வர்ட் வாலட் பிராண்டுகளா இருக்கு. இந்த நிறுவனங்கள்ல மிக குறைந்தபட்சமா நம்ம ஊர் மதிப்புக்கு சில ஆயிரம் கோடிகளை சேமிக்க முடியுது.

இதுக்கு என்ன பிசினஸ் உதாரணம் என்றால் நம்ம ஊர் பேங்க்ல இந்த ₹50,000 ரூபாய்க்கு மேல கேஷ் போட்டாலே பான் கார்டு கேக்குறாங்க. ஆனா இந்த லெட்ஜரோ இல்ல இந்த டிரஸ்ரோ நீங்க Amazonலயோ இல்ல வெளிநாட்டு வெப்சைட்லயோ காசு கொடுத்து வாங்கிட்டா அதை பயன்படுத்துறதுக்கு உங்களோட பேரு அட்ரஸ் ஐடி ப்ரூப் எதுவுமே தேவையில்லை.

ஜீரோ கேஒசி அதாவது புரியுதா எந்த அரசாங்கத்தாலயும் இந்த டிவைஸ் யாரோட பேர்ல இருக்கு அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது. இதுக்காக ஒரு பென்டிரைவ் மற்றும் ஏடிஎம் கார்டு வடிவத்தில் இருக்கிற ஒரு கார்டு கொடுப்பாங்க. இதுக்கு பாஸ்வேர்ட் அப்படி அப்படின்னா இந்த 12 வார்த்தைகள், 24 வார்த்தைகள், 32 வார்த்தைகள்னு மிக நீளமான ரகசிய வார்த்தைகளை அமைப்பாங்க. ஒருவேளை அந்த பென் டிரைவ் தொலைஞ்சு போனாலோ இல்ல திருடப்பட்டாலோ அந்த பாஸ்போர்ட் மூலமாவே அதோட விபரங்களை எடுத்துட முடியும்.

அதனாலதான் இந்த 36 வார்த்தைகள் வரைக்கும் இந்த ஹார்ட்வர்ட் வாலட்ல பாஸ்வேர்டுகளா உருவாக்குறாங்க. பல லட்சம் கோடிகளை ஒரே ஒரு சின்ன பென்டிரைவ்குள்ள வச்சுக்க முடியும். ஸ்விட்சர்லாந்த் நாட்டில இருக்கிற பேங்குகள்ல இதுக்கு முன்னாடி இந்தியா உட்பட பல நாடுகளோட கருப்பு பணம் பாதுகாப்பா இருக்கு அப்படின்னு
குற்றச்சாட்டு இருந்துச்சு. ஆனா இப்ப அதே வேலையை பல நாடுகளை சேர்ந்த முக்கியமான பொருளாதார நிறுவனங்கள் டெக்னாலஜி மூலமா செஞ்சிட்டு வராங்க.

இந்த நிறுவனங்கள்ல யார் யார் எத்தனை ஆயிரம் கோடிகள் எத்தனை லட்சம் கோடிகள் வச்சிருக்காங்க அப்படின்னு எந்த புலனாய்வு ஏஜென்சி மூலமாவும் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியல. இன்னும் சொல்லப்போனா இப்ப ஊழல் வழக்குகளை சந்திக்கிற முன்னாள் அமைச்சர்கள் கூட தங்களோட அடுத்தடுத்த தலைமுறைகளோட சர்வதேச தொடர்புகள் மூலமா இந்த ஹார்வர்ட் வாலட்டுகள்ல பல்லாயிரம் கோடி ரூபாய வச்சிருக்க கூடும்” எனச் சொல்கிறார்கள்.

போதிய அளவுக்கு அதிகாரிகள் கூட இல்லாத தமிழ்நாடு அரசோட இந்த லஞ்ச ஒழிப்பு துறை, இந்தியாவோட சிபிஐ, அமலாக்கத்ததுறை மாதிரியான ஊழல் ஒழிப்பு விசாரணை அமைப்புகள் இன்னுமும் நவீன டெக்னாலஜி வசதிகளை புலனாய்வுக்காக ஓரளவுக்கு கூட பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. ஆனால் கருப்பு
பணத்தை பதுக்கி வைத்திருக்கிற முதலைகள் டெக்னாலஜியோட உச்சத்தில் இருக்கிறார்கள். இங்கேதான் முக்கியமான கேள்வி.

இந்த ஹார்ட்வர்ட் வாலட்டில் இருக்கிற இந்த கருப்பு பணத்தை இந்திய அரசால் ட்ராக் பண்ணவே முடியாதா? முடியாது அப்படி எனச் சொன்னால் அது பச்சை பொய். ஏனென்றால் சர்வதேச அளவில் இதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. ஃர்ஸ்ட் பர்ஸ்ட் ஆப்ஷன் இந்த ஆன் செயின் பாரன்சிக்ஸ் அண்ட் கிளஸ்டர் அனாலிசிஸ் பிளாக் செயினில் சாதாரண ஆளால் இந்த பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறார்கள். ஆனால் இந்த செயின் அனாலிசிஸ், எலிப்டிக் மாதிரியான சர்வதேச சைபர் பாரன்சிக்ஸ் நிறுவனங்களில் கிரிப்டோ வாலட் முகவரிகளை கண்காணித்து, அது எந்த பி டுபி எக்ஸ்சேஞ்சில் ரொக்கப் பணமாக மாறுகிறது, எந்த ஹவாலா ஏஜென்ட் மூலமாக பேங்குகளுக்கு வருகிறது எனச் சொல்லி கேஷ் அவுட் பாயிண்ட்ஸை சரியாக ட்ராக் செய்ய முடியும்.

இதையும் படியுங்க  "ஏரி முழுங்கி எ.வ.வேலு..! ரோடுக்கு அடுத்து ரூ.8 கோடி ஏரி மண்ணா..?! வளைத்துப் பிடித்த அறப்போர் இயக்கம்!"

இரண்டாவதாக கேஒய்சி மற்றும் ஐஎஸ்பி கண்காணிப்பு. கார்ட் வாலட் ஆப்லைனில் இருந்தாலும் அதிலிருந்து பணத்தை அனுப்புகிறபோது அல்லது கிரிப்டோ பேலன்ஸ் செக் செய்கிறபோது இன்டர்நெட் கண்டிப்பாக அவசியம். அரசு நினைத்தால் இந்திய இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மூலமாக இந்த ஹார்ட்வேர்ட் வாலட் ஐபி அட்ரஸை ஈஸியாக கண்டுபிடிக்க முடியும். மூன்றாவதாக சீட் ஃபேஸ்க்குகளை கைப்பற்றுவது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் அவ்வப்போது வெறும் பணத்தை மட்டும் தேடாமல் இந்த 12 அல்லது 24, 32 எண்கள் கொண்ட ரகசிய வார்த்தைகள் இருக்கிற பாஸ்வேர்ட் காகிதங்களையும், டிஜிட்டல் ஃபைல்களையும் குறி வைத்து ரெய்டு பண்ண முடியும்.

இன்னொரு சுவாரசியமான கேள்வி வரும். இந்த ஹார்வர்ட் வாலட்டோட 12 இல்ல 24 வார்த்தைகள் கொண்ட ரகசிய பாஸ்வேர்டை அவர்கள் மனசில் வைத்துக் கொள்ளாமல் தனக்கு ரொம்ப நம்பிக்கையான மூன்றாவது நபரிடம் கொடுத்து வைத்திருந்தால் என்ன செய்வது? அதாவது மெயில் மூலமாகவோ, நேரிலோ
கூப்பிட்டு இந்தப்பா ரகசிய வார்த்தை இதான் என்னோட பாஸ்வேர்டு. இத பத்திரமா வச்சுக்கோ. யாராவது கேட்டா உயிரே போனாலும் சொல்லக்கூடாது. நான் வந்து கேட்கறப்ப மட்டும் என்கிட்ட மட்டும்தான் சொல்லு” என கொடுத்து வைத்திருந்தால் அதற்கு என்னதான் தீர்வு?

அமலாக்கு துறை மற்றும் வருமான மாணவரித்துறை அதிகாரிகளால் இது எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஒருவர் தன்னோட வேலட் பாஸ்வேர்டை டிஜிட்டலாகவோ அதாவது வாட்ப்ஸ் அப், டெலிகிராம், ஜிமெயில் மூலமாகவோ இன்னொருத்தருக்கு அனுப்புகிறார் என்றால் அவர்கள் வாட்ப்ஸ் அப் எண்ட் டு எண்ட் என்ஸ்கிரிப்ட் ஆச்சே. இதை யாரு பார்க்க முடியும்? ஆனால் அங்கேதான் மாட்டுகிறார்கள். ரெய்டு நடக்கிறபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது போனையும், லேப்டாப் எல்லாத்தையும் பறிமுதல் செய்து செலிப்ரேட் மாதிரியான சர்வதேச சைபர் பரன்சிக்ஸ் டூல்ஸ் மூலமாக ஸ்கேன் செய்வார்கள். நீங்கள் WhatsAppல் மெசேஜ் டெலீட் பண்ணி இருந்தாலும் அதோட சாட் பேக்கப், கிளவுட் ஸ்டோரேஜ் எஸ்கியூலைட் டேட்டாபேஸ் மூலமாக அந்த 12 அல்லது 24 ரகசிய வார்த்தைகளை அச்சு பிசகாமல் எடுத்துவிடுவார்கள்.

பலபேர் அந்த பாஸ்வேர்டை மனப்பாடம் பண்ண முடியாமல் போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துதான் வைத்திருப்பார்கள். ஒரு டைரியில் நோட் பண்ணி வைத்திருப்பார்கள். டிஜிட்டலாக ஏதாவது ஒரு நோட்பேடில் டைப் சேவ் பண்ணி வைத்திருப்பார்கள். கேலரியில் இருந்து டெலீட் செய்த ஃபைல்களை கூட
டிஜிட்டல் ஃப்ரன்சிக்ஸ் மூலமாக ஈஸியாக தூக்கிவிட முடியும். சரி, WhatsApp, மெயிலில் அனுப்பினால் டிஜிட்டலாக மாட்டிக் கொள்வார்கள் ஆனால் எந்த டிஜிட்டல் ஆதாரமும் இல்லாமல் நேரில் கூப்பிட்டு ஒரு காகிதத்தில் எழுதி ஒரு நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து வைத்திருந்தால் அமலாக்கத்துறை என்ன பண்ண முடியும்?

இங்கேதான் அமலாக்கத்துறையோட அந்த மனித உளவு, நிதித்தொடர்புகள் விசாரணை வேலை செய்யும். பொதுவாக ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழிலதிபரோ தன்னோட டிரைவர், உதவியாளர், ஆடிட்டர் இந்த மாதிரி தூரத்து உறவினர்கள் மீதுதான் நம்பிக்கை வைப்பார்கள். அமலாக்க துறை சந்தேகப்படுகிற நபரை கைது செய்கிறபோது அவரை மட்டும் சோதனை இட மாட்டார்கள். அவரது இன்னர் சர்க்கிள் எனச் சொல்லப்படுகிற ஐந்துலிருந்து 10 நம்பிக்கையான நபர்களது வீடுகளையும் ஒரே நேரத்தில் சோதனை செய்வார்கள். அந்த 24 வார்த்தைகள் ரகசிய பாஸ்வேர்ட் வைத்திருக்கிற நபர் ஒன்னும் பெரிய கிரிமினல் மாஃபியா எல்லாம் கிடையாது.

இதையும் படியுங்க  மேஜிக்கல்- மிராக்கிள் நடக்கப்போகிறது..! திமுக அலறப்போகிறது..! முதல்வர் விஜய் வியூகம்..!

சாதாரண ஒரு ஏஜென், ஹெல்ப்பர், அசிஸ்டன்ட்ஸ் இந்த மாதிரிதான் இருப்பார்கள். அமலாக்கத்துறையை சம்மன் அனுப்பி பினாமி சட்டத்துக்கு கீழ் உன்னையும் குற்றவாளியா சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவோம் என ஒரு சட்ட நெருக்கடி தருகிறபோது 99% பேர் பயந்து போய் அந்த பாஸ்வேர்ட் இருப்பதை அதிகாரிகளிடம்
ஒப்படைத்து விட்டு அப்ரூவராக மாறிவிடுவார்கள். பாஸ்வேர்ட் அந்த நபரிடமே பத்திரமாக இருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் அந்த வாலட்டில் இருக்கிற பணத்தை ரொக்கமாக மாற்றுகிறபோது அந்த பணம் அந்த உதவியாளரோட கணக்குக்கோ இல்லை அவர் சார்ந்த பிசினஸ்க்கோ தான் வரும்.

”உனக்கு ஏது இவ்வளவு பணம்? என நிதி புலனாய்வு பிரிவு கேள்வி கேட்கிறபோது மொத்த குற்றமும் வெளிப்பட்டு விடும். அப்போது முழுமையாக தப்பிக்கவே முடியாதா என்றால் உண்மைய சொல்ல வேன்டும் என்றால் ஹார்வர்ட் வாலட்டை பொறுத்தவரை பாஸ்வேர்ட் யாரிடம் இருக்கிறதோ அவர்தான் அந்த பணத்தோட முதலாளி.
அந்த ரகசிய 24 வார்த்தைகள் வைத்திருக்கிற நபர் மனசு மாறினாலோ இல்லை, அவர் திடீரென இறந்து போனாலோ அந்த பணத்தை வைத்திருக்கிற மெயின் ஆளால் கூட தன்னுடைய சொந்த பணத்தை எடுக்கவே முடியாது.

அதனால் அந்த வெளிநபர்களிடம்ட கொடுத்து வைப்பதில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. அதனால்அது சம்பந்தப்பட்டவர்களிடம்தான் இருக்கும். அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் இன்னுமும் அந்த பழைய பாணி விசாரணை முறைகளை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு அதிநவீன அந்த பிளாக் செயின் பாரன்சிக்ஸ் மற்றும் டிஜிட்டல் டிவைஸ் ரெக்கவரி பயிற்சிகளை முழுமையாக கையில் எடுக்கிறபோது இந்த ஹார்வர்ட் வாலட்
கருப்பு பண பதுக்கல்களும் அதை மறைத்து வைத்திருக்கிற நபர்களும் சட்டத்துக்கு முன் ஈஸியாக அவர்களை கொண்டு வந்து நிறுத்த முடியும்.

ஆனால் இவ்வளவு வழிமுறைகள் இருந்தும் அரசு ஏன் இதுவரை இதை சரியாக செய்யவில்லை. என்ன காரணமாக இருக்கும் எனப் பார்த்தால் முதல் காரணம் டெக்னாலஜி அறிவு அந்த உட்கட்டமைப்பும் இல்லாதது. நமது அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு பிளாக்செயின் பாரன்சிக்ஸ் மற்றும் ஹார்ட்வர்ட் வாலட் பற்றிய இந்த நவீன பயிற்சிகள் ரொம்ப ரொம்ப குறைவு. ஒரு ஹார்ட்வர்ட் வாலட்டை பார்த்தாலே அது சாதாரணமா யுஎஸ்பி டிரைவா அல்லது கிரிப்டோ வாலட்டா என கண்டுபிடிக்கிற அளவுக்கு கூட நம் அதிகாரிகளுக்கு நவீன கருவிகள் இல்லை.

இரண்டாவது காரணம் இந்த எல்லை தாண்டிய கட்டுப்பாடுகள் இல்லாதது. இந்த லெட்ஜர் ட்ரஷர் மாதிரியான ஹார்ட்வேர்ட் வாலட் தயாரிக்கிற கம்பெனிகள் வெளிநாடுகளில் உள்ளன. இந்திய அரசால் வெளிநாட்டு தனியார் கம்பெனிகள் மீது நேரடியாக உத்தரவுகளை போட முடியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் மூன்றாவது காரணம்தான் ரொம்பவே அதிர்ச்சியானது. அரசியல் கார்ப்பரேட் கூட்டு அதாவது கருப்பு பணத்தை புழங்குகிற ஹார்ட்வர்ட் வாலட் பணத்தை வைத்திருப்பது வெறும் சாதாரண குற்றவாளிகள் மட்டுமல்ல.

நம்ம ஊர் பெரிய பெரிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் மற்றும் மிகப்பெரிய தொழில்திபர்களும் தான். விசாரணை ஏஜென்சிகளை ஸ்ட்ராங் செய்து அதிநவீன பிளாக் செயின் கண்காணிப்பு கருவிகளை கொண்டு வந்தால் முக்கிய அரசியல்வாதிகளே இதில் சிக்குவார்கள். ஏன் மறுபடியும் ஒருமுறை நம் நாட்டில்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தால் கூட ஏழைகளும் இந்த நடுத்தர மக்களும் தான் வரிசையில் நின்று பாதிக்கப்படுவார்களே தவிர இது மாதிரியான இந்த ஹார்வர்ட் வாலட்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாயை தூங்க வைத்திருக்கிற ஊழல் யானைகளும், ஊழல் முதலைகளும் ஒருபோதும் சிக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 minutes ago at 50 minutes ago