https://republictn.com/

தேனி ஆண்டிப்பட்டியில் பரபரப்பு: 64 வாடிக்கையாளர்களின் 139 சவரன் நகைகளுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவு – 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் நகை அடகுக்கடை உரிமையாளர், 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல் கடையைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற துரைமுருகன், ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே “ஸ்ரீ முருகன் கோல்டு லோன்” (Sri Murugan Gold Loan) என்ற பெயரில் தனியார் நகை அடகுக்கடையை நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ரோசனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது 6 சவரன் தங்க நகையை அடகு வைத்து, ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது நகையை மீட்பதற்காக அடகுக்கடைக்குச் சென்றபோது, கடை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படியுங்க: “மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை!” 5 மணிநேர விசாரணைக்குப் பின் எ.வ. வேலு அதிரடி! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த செக்!

அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அந்த அடகுக்கடை பல நாட்களாகத் திறக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு நகைகளை அடகு வைத்திருந்த பிற வாடிக்கையாளர்களும் விசாரித்தபோது, கடை உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன் மற்றும் கடை ஊழியர் ஸ்ரீமதி ஆகியோர் கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படியுங்க: “ஆசிரியரா இவர்? மாணவனை இரும்புச் சுத்தியலால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”

விசாரணையில், மொத்தம் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் தங்க நகைகள் திருப்பிக் கொடுக்கப்படாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக கடை உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன் மற்றும் கடை ஊழியர் ஸ்ரீமதி ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: அவர் CM இல்ல.. என் தம்பி!” – ஓடிவந்து முதலமைச்சர் காரை மறித்த ‘வேலு அம்மா’ டி.கே. கலா! நெகிழவைக்கும் பின்னணி!

இந்தச் சம்பவத்தால், தங்களது உழைப்பில் சேர்த்த நகைகளை நம்பிக்கையுடன் அடகு வைத்திருந்த ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளனர். தங்களது நகைகள் மீண்டும் கிடைக்குமா என்ற அச்சத்துடன் அவர்கள் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த மோசடி சம்பவம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் விரைவில் கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago