Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் களம் தற்போது ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நடக்கும் சீக்ரெட் வார் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக-வின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்து, விஜய்யின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட திமுகவின் ‘அறிவாலயம்’ மெகா பிளான் ஒன்றை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.

இந்த அதிரடி நகர்வுகளுக்குக் தவெக-வுக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்கட்சிப் பதற்றமே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தவெக தலைமை தற்போது உள்கட்சி ரீதியாக 234 தொகுதிகளையும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்கத் திட்டமிட்டு வருகிறது. ஆனால், இங்குதான் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. “மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து, தவெக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் நபர்களுக்கு மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பதவிகளைத் தரக்கூடாது” என்று கட்சியின் சீனியர் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மறுபுறம், புதிய எம்.எல்.ஏ-க்களோ தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாவிட்டால், “நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்” என்று பனையூர் தலைமைக்கு வெளிப்படையாகவே அழுத்தம் கொடுத்து, அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  திமுக 59 இடங்களில் வெற்றி பெற நான்தான் காரணம்..! சாதி புத்தியால் குறி வைக்கிறார்கள்..! திருமா புலம்பல்..!

இந்த நிலையில், தவெக-வினரின் இந்த உள்கட்சி அதிருப்திக்குக் பின்னணியில் திமுக காய் நகர்த்தி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் தவெக தலைமைக்குப் புகார்களும் சென்றுள்ளன. குறிப்பாக, திமுகவின் முக்கிய விஐபியான கரூர் செந்தில் பாலாஜி இந்த ஆபரேஷனைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிருப்தியில் இருக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களிடம் மிக ‘வெயிட்டான பேக்கேஜ்’ பேசி, அவர்களை அறிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை அவர் வெற்றிகரமாக முடித்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் பனையூர் வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.

இந்த உள்கட்சி மோதலையும், திமுகவின் ரகசிய ஆப்ரேஷனையும் தவெக தலைமை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அக்கட்சியின் எதிர்கால நகர்வுகள் அமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago