Sengundram

போலீஸ்காரங்களுக்கே பாதுகாப்பு இல்லைன்னா, நமக்கு யாரு சார் பாதுகாப்பு?”

திருவள்ளூர் மாவட்டம்  மாதவரம் அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நேற்று இரவு அப்படித்தான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண் முன்னாலேயே நடந்தது ஒரு சினிமா காட்சி அல்ல. நிஜம். கொடூரமான நிஜம்.

நடுரோட்டில் நடந்த வெறியாட்டம் செங்குன்றம். பேருந்து நிலையம். அதற்கு ஒரு கல் எறியும் தூரத்தில்தான் காவல் நிலையம். அங்கே கையில் பட்டாக்கத்தியுடன் வந்து நின்றான் தினேஷ், 26 வயது. உடம்பெல்லாம் போதை. கண்ணெல்லாம் சிவப்பு. பேருந்துக்காக காத்திருந்த அப்பாவி மக்களைப் பார்த்து கத்தியைச் சுழற்றி மிரட்டல். இரண்டு பேரை சரமாரியாக வெட்டிவிட்டான்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார் எஸ்.ஐ. செந்தில்குமார். “டேய்… கத்தியைப் போடுடா!” என்று அவர் சொல்வதற்குள், அந்த வெறியன் கத்தியை அவர் மீதே வீசிவிட்டான். யோசித்துப் பாருங்கள். காக்கி சட்டை. தொப்பி. கையில் லத்தி. அரசாங்கத்தின் அத்தனை அதிகாரமும் அந்த சீருடைக்குள் இருக்கிறது. அந்த சீருடையைப் பார்த்தாலே குற்றவாளிகள் ஓடி ஒளிய வேண்டும். அதுதான் இத்தனை காலம் நாம் பார்த்த தமிழ்நாடு.

இதையும் படியுங்க  கள்ளக்காதல் ... சந்தேகப் புதைகுழி... கடத்தூரை உலுக்கிய ஒரு அடி ஆழக் கொலை!

ஆனால் இன்று? காவல் நிலையத்தின் வாசலிலேயே நின்றுகொண்டு, காக்கி சட்டைக்காரரையே வெட்ட வருகிறான் ஒரு போதை வாலிபன். அவனுக்கு எங்கிருந்து வந்தது அந்த தைரியம்?

பெல்ட்தான் கேடயம்! இதுதான் இந்த சம்பவத்தின் உச்சக்கட்ட கொடுமை.

எஸ்.ஐ. செந்தில்குமார் கையில் துப்பாக்கி இல்லை. லத்தி இல்லை. கேடயம் இல்லை. அவர் உயிரைக் காப்பாற்றியது எது தெரியுமா? அவர் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்!

ஆம். சீருடை பெல்ட்டை உருவி, சினிமா ஹீரோ மாதிரி சுழற்றி, அந்த கத்தி வீச்சிலிருந்து தப்பித்திருக்கிறார் மனிதர். அந்த வீடியோவைப் பார்த்தாலே குலை நடுங்குகிறது.

ஒரு காவல் அதிகாரிக்கு தன்னைக் காத்துக்கொள்ள பெல்ட்தான் ஆயுதம் என்றால், அரசாங்கம் அவருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது? காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்வார்?

“இது அவங்க area” என்ற மிதப்பு! இன்று தமிழ்நாட்டில் குற்றவாளிகள் மத்தியில் ஒரு மிதப்பு இருக்கிறது. “இது நம்ம area” என்று நடமாடுகிறார்கள்.

பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வெட்டுக் கொலை. கடைக்குள் புகுந்து அரிவாள் வீச்சு. குழந்தைகள் காணாமல் போவது. பள்ளி மாணவன் தற்கொலை. செஞ்சி சிறுமி 26 நாட்களாகியும் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்க  "நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் வழக்கு! சமரசமா? விவாகரத்தா?

இத்தனைக்கும் உச்சமாக, இப்போது போலீஸையே வெட்ட வருகிறார்கள்.

இதுதான் வெற்றி சட்டம்-ஒழுங்கு திட்டமா? இதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? கஞ்சா எங்கிருந்து வருகிறது? யார் விற்கிறார்கள்? ஒரு காவல் நிலையத்தின் மூக்குக்குக் கீழேயே கஞ்சா போதையில் ஒருவன் கத்தியுடன் சுற்றுகிறான் என்றால், அந்த ஏரியாவில் போதை வலைப்பின்னல் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று அரசாங்கத்திற்குத் தெரியாதா? தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதா?

முதல்வர் எங்கே?

ஒரு மாநிலத்தில் இப்படி அடுத்தடுத்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால், முதல்வர் என்ன செய்ய வேண்டும்?

டிஜிபியைக் கூப்பிட வேண்டும். உள்துறைச் செயலாளரைக் கூப்பிட வேண்டும். உடனே மீட்டிங் போட வேண்டும். 48 மணி நேரத்தில் கஞ்சா நெட்வொர்க்கை கூண்டோடு அழிக்க உத்தரவு போட வேண்டும்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது? தலைமைச் செயலகத்தில் உளவுத்துறை தரும் ரகசிய அறிக்கைகள் (TSR) தூசி படிந்து கிடக்கின்றன. அரசியல் கணக்குகளிலேயே நேரம் வீணாகிறது.

சாமானிய மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: “காவல் நிலையத்தின் வாசலிலேயே போலீஸ்காரருக்கு இந்த நிலைமை என்றால், ஆயுதமும் இல்லாமல், அதிகாரமும் இல்லாமல் நடுரோட்டில் நிற்கும் நாங்கள் என்ன செய்வது? யாரை நம்புவது?”

இதையும் படியுங்க  அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தவெக புள்ள பூச்சிகள் அட்ராசிட்டி… கொடுக்கை வெட்டி வீசுவாரா விஜய்… முகம் சுழிக்கும் மக்கள்…!!

குட்டு வைக்க வேண்டிய நேரம் இது!

செங்குன்றம் சம்பவம் ஒரு தனி சம்பவம் அல்ல. அது ஒரு எச்சரிக்கை மணி.

காவல்துறையின் கம்பீரம் சிதைந்தால், சட்டத்தின் மீதான மரியாதை சிதையும். சட்டத்தின் மீதான மரியாதை சிதைந்தால், எந்த மாநிலமும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. காவல்துறை அதிகாரி மீது கை வைக்கும் துணிச்சல் யாருக்கும் வராத வண்ணம், கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் புழக்கத்தை வேரோடு அழிக்க வேண்டும்.

இல்லையென்றால், நாளை இதே கத்தி நம் வீட்டு வாசலுக்கும் வரும். அப்போது காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால், காப்பாற்ற வேண்டியவர்களே இன்று பெல்ட்டை சுழற்றி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

-இது செங்குன்றத்தின் குரல் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் குரல்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *