Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தேசிய அளவிலான நீட் (NEET) உள்ளிட்ட பொதுப் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை அண்மையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது மக்களவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்புச் சட்டம் (Public Examinations (Prevention of Unfair Means) Act) தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தின் மூலம், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு, பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடந்த இரண்டு நாட்களாக விரிவான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதையும் படியுங்க  "நீங்க வாழ்றதே எங்க பணத்துலதான்..! பவன் கல்யாணை வம்புக்கு இழுக்கும் கவிதா..!
Republic Tamil

புதிய சட்டத்திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதனுடன், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு வினாத்தாள்களைத் திட்டமிட்டு கசியவிடும் கும்பல்கள் அல்லது அமைப்புசார்ந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Republic Tamil

அதேபோல், தேர்வுகளை நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அல்லது தேர்வு அமைப்புகளின் நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, சம்பவம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  “இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு மூவ்.. ரஷ்யாவுடன் நடந்த ரகசிய ஆலோசனை!”

அதன்பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தி, வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் புதிய சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வழிவகுக்கும் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா – 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை கடந்த ஜூலை 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Republic Tamil

புதிய சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் மறுநாள் காலை வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  "ஷாப்பிங் போறீங்களா? அப்போ பில் போடும்போது இத கண்டிப்பா பாருங்க.. இல்லனா நீங்கதான் ஏமாறுவீங்க!"
Republic Tamil

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தச் சட்டம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட நினைப்போருக்கு கடுமையான எச்சரிக்கையாகவும் அமையும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago