Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவ-மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையங்களிலேயே புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுவரை, பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையில் அரசு பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வர கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவிகள், தாங்கள் கல்வி பயிலும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  2500 கிலோ ஆட்டுக்கறி, 1300 கிலோ சாதம்… தடபுடல் அசைவ விருந்துடன் நடந்த முனீஸ்வரன் கோயில் திருவிழா…!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago