Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

EPS ,Vijay

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைமை இன்னும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஆறு எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் போய் ஐக்கியமாகி விட்டார்கள்.

அவர்கள் ராஜினாமா செய்த அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறது. ஆளுனர் மூலமாகவும், மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதே நேரம் இடைத்தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்க, இந்த நிலைமையில் அந்த தடையை நீக்கக்கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்தில் கூட இரு நாட்களுக்கு முன் மனக்குமுறலை அடக்க முடியாமல் குதிரை பேரம் என எடப்பாடி பழனிசாமி பேசிய அந்த விவாதம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Republic Tamil

இந்த நிலைமையில் அதிமுகவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.,க்களை தூக்குவதற்கு தமிழக வெற்றிக்கழகம் தூண்டில் இல்லை, அடியில் வலையையே போட்டு வைத்திருக்கிறது. இன்னும் மேலே தூக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி. இரண்டு தனித் தொகுதி எம்எல்ஏக்கள், 4பொதுத் தொகுதி எம்எல்ஏக்கள் என மொத்தம் ஆறு பேர் அதிமுகவில் இருந்து இப்போது தவெகவுக்கு தாவுவதற்கு க்யூவில் நிற்கிறார்களாம்.

இதையும் படியுங்க  CM விஜய்-க்கு சிக்கல்.. திருமா, சிபிஐ எதிர்ப்பு – திமுகவின் அதிரடி வியூகம்..?

இதைக் கேட்டு ஷாக்கான எடப்பாடி பழனிசாமி, ”உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாப்பா.. ஏற்கனவே கொத்து கொத்தா தூக்கிட்டீங்க.. இன்னுமா..? இதுக்கு மேல எல்லாம் முடியாது. இனி அதிமுகவில் இருந்து ஒரு விக்கெட் கூட போக விட மாட்டேன்” என அதை தடுக்கிற வேலைகளில் இப்போது தீவிரமாக களமிறங்கி இருக்கிறாராம். அதனால்தான் சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக பேசுகிறபோது அவர் செம்ம டென்ஷனாவே பேசிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சசிகலாவிடமும், டி.டி.வி.தினகரனிமும் தனித்தனியாக பேசிக் கொண்டு வருகிறார். இதுவரை அதிமுக நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசாத டி.டி.வி. தினகரன் கூட இப்போது பேச ஆரம்பித்து இருக்கிறாராம். இன்னொரு முறை கொத்தாக அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு செல்வதை தடுக்கிற விதமாக அதிமுகவில் சில மெகா இணைப்பு முயற்சிகள் இப்போது தீவிரம் அடைந்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago