Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Amit shah

‘புதுச்சேரியில் மாநில அந்தஸ்துக்காக என்னோட முதலமைச்சர் பதவியை கூட நான் ராஜினாமா பண்ண ரெடிப்பா” என ரங்கசாமி அறிவித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு முன்பே புதுச்சேரியில் தேர்தல் முடிந்தாலும் தமிழ்நாட்டுடன் சேர்த்துதான் அங்கேயும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் ஆரம்பத்தில் இருந்தே அவர்களது இரண்டு கட்சிக்கும் இடையில் பவர் யுத்தம் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. சபாநாயகர் பதவியை தங்களுக்குதான் வேணும் என பாஜக கேட்டது. ஆனால் சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு கொடுக்க முடிவு செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. பிறகு பாஜக கேட்ட ஹோம் மினிஸ்டர் உள்ளிட்ட முக்கிய துறைகளையும் ரங்கசாமி விட்டு கொடுத்து விட்டார். இதனால் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்குவதிலேயே மிகப்பெரிய தாமதம் ஆகி விட்டடது.

இந்த நிலைமையில்தான் சமீபத்தில் நடந்த அமித் ஷா கலந்து கொண்ட தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கூட ரங்குசாமி கலந்துகொள்ளவில்லை. புதுச்சேரி சார்பாக துணைநிலை ஆளுனர் கைலாசநாதன் தான் அதில் கலந்து கொண்டார். இந்த பின்னணியில்தான் புதுச்சேரி சட்டமன்றத்தில் நடந்த இந்த மாநில அந்தஸ்து தொடர்பான விவாதத்தில் சில எம்எல்ஏக்கள் தங்களோட பதவியை ராஜினாமா செய்ய தயார் என சொன்னார்கள். அப்போதுதான் முதலமைச்சர் ரங்கசாமியும், மாநில அந்தஸ்துக்காக என்னோட முதலமைச்சர் பதவியைக்கூட தூக்கி போட நான் தயாரா இருக்கேன் என அதிரடியாகப் பேசினார்.

இதையும் படியுங்க  விஜய்யை ஆட்சியில் அமர்த்த மாஸ்டர் பிளான் - அதிமுகவை உடைக்க அமித்ஷா ஸ்கெட்ச்..!

பாஜகவுடன் இணக்கம் இல்லாததால் சமீப காலமாக புதுச்சேரியின் முக்கிய முடிவுகளை துணைநிலை ஆளுனர் கைலாசநாதனும், தலைமை செயலாளரும் சேர்ந்துதான் எடுக்கிறார்களாம். முதலமைச்சர் ரங்கசாமியை அவர்கள் ஒரு பொருட்டாவே மதிக்கிறதே இல்லையாம். ரங்கசாமி சொன்ன ஒரு சின்ன டிரான்ஸ்பர் கூட அங்க நடக்கறது இல்லை என புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் டெல்லிக்கு ஒரு அசிட் டெஸ்ட் கொடுப்பதற்காக இந்த ராஜினாமா கார்டை கையில் எடுத்திருக்கிறார் ரங்கசாமி. ஆனால், பாஜகவோ எலக்சன் ரிசல்ட் வந்த உடனேயே என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பல பேருக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்து லாக் செய்து வைத்து விட்டது. மீதி பணமும் செட்டில் ஆகிவிட்டால் ரங்கசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் புதுச்சேரியில் இருந்து
கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago