Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புதுச்சேரியில் சம்பளம் தர மறுத்த உரிமையாளருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த வாகனங்களை லாஸ்பேட்டை- கிழக்கு கடற்கரை சாலையில் காலி நிலத்தில் நிறுத்துவது வழக்கம். அப்படி நிறுத்தி இருந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் நாட்டு வெடிகுண்டை இயந்திரத்தின் மீது வீசி விட்டு ஓடியுள்ளார்.

பயங்கர சத்தத்துடன் அது வெடிக்க அக்கம் பக்கத்தினர் பயந்து லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அடுத்த சில நொடிகளில் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில தொழிலாளர்களுக்கு ஜேசிபி உரிமையாளர் சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு தொழிலாளி நாட்டு வெடி குண்டுவீசி மிரட்டதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்க  "மனைவி கொடுத்த ரகசிய 'வாட்ஸ்அப்' ஆதாரங்கள்… இரவோடு இரவாக தூக்கப்பட்ட பரமக்குடி டிஎஸ்பி!"

-சக்திவேல்- சிறப்பு நிருபர், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago