Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் இந்தக் கோவிலின் வருடாந்திர வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் முன்பு பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 128 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டு (2500 கிலோ கறி) 9 அண்டாக்களில் சமைக்கப்பட்டு, 13 மூட்டை (100 கிலோ) 1300 கிலோ அரிசி 9 சமையல் கலைஞர்களால் சமைக்கப்பட்டு தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தி பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் நடைபெற்றது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும் அன்னதானத்தில் கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தர்ம முனிஸ்வரரை தரிசித்து அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க  “7 லட்சம் மோசடி முதல் 5 சவரன் கொலை வரை! தவெக பிரமுகர்கள் மீது பரபரப்பு புகார்கள்”
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago