Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கே.வி.குப்பம் வட்டாட்சியா் கே.பலராமன்(40) வீட்டில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் வட்டம், எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பலராமன். வேலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தோ்தல் அறிவிப்பின் போது கே.வி.குப்பம் வட்டாட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியதாக அந்தப்பகுதியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் கிடந்தவரை உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தப்போது அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறி இருக்கிறார்கள்.

தகவலின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தாசில்தார் பலரானுக்கு மனைவி சுகன்யா, மற்றும் 2 மகன்கள் உள்ளனா். பாலராமன் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுவதால் குடும்ப பிரச்சினையா? வேறு ஏதேனும் காரணங்களா? எனப் பல்வேறு வகையான கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையும் படியுங்க  கோவையை உலுக்கிய கொடூரம்… சடலமாக மீண்ட சிறுமி
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago