Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராஜரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் அமைந்துள்ள அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.

ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டம் காமராஜர் தெருவில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த எளிய இல்லம் புதுப்பிக்கப்பட்டு, வண்ண மின்விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இந்த இல்லம், தற்போது தமிழ்நாடு அரசால் வரலாற்று நினைவில்லமாகப் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நினைவில்லத்தில், காமராஜரின் சிறுவயது புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள், அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

132-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நினைவில்லத்தைப் புதுப்பிக்கும் பணிகளும், அலங்காரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளால் ஒளிரும் காமராஜரின் இல்லம், பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்து, அவரது எளிமையான வாழ்க்கையையும் கல்விக்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் நினைவூட்டும் வகையில் காட்சியளித்து வருகிறது.

இதையும் படியுங்க  பில்டப்பா..? பிலாவா? உலகம் பார்த்துட்டே இருக்கணும்..! ரீல்ஸில் தொழில் அழைப்பு! அமைச்சர் கீர்த்தனாவின் புதிய ஸ்டைல்..!

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago