Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரர் மிச்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் லக்னோ அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படியுங்க  45 வயதில் புதிய அவதாரம்! சிஎஸ்கே-வில் தல தோனிக்கு காத்திருக்கும் மாபெரும் பொறுப்பு..! ரசிகர்கள் உற்சாகம்..!

போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர் அங்க்ரிஷ் கம்போஜ் 16 பந்துகளில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது இரண்டாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளை மிச்செல் மார்ஷ் சிக்ஸர்களாக மாற்றினார். அதேபோல், அவரது மூன்றாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளை நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago