Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

gold loan

இன்று இரவு 11 மணிக்கு உங்களிடம் உள்ள தங்கத்தின் தலையெழுத்தையே முற்றிலுமாக மாற்ற போகும். ஒரு மிகப்பெரிய பொருளாதார முடிவு அமெரிக்காவிலிருந்து வெளியாக உள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நேற்றும் இன்றும் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தங்களது வட்டி விகிதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று நள்ளிரவு வெளியிடுகிறது. இந்த ஒற்றை அறிவிப்புதான் அடுத்த சில மாதங்களுக்கு உலகலாவிய தங்கத்தின் விலையை தீர்மானிக்க போகிறது.

Gold Loan

இன்று இரவு நிஜமாகவே என்ன நடக்க போகிறது? தங்கம் விலை ஏறுமா? இறங்குமா? வாங்க விரிவாக பார்க்கலாம்.

பொருளாதார நிபுணர்களின் கணிப்புபடி நள்ளிரவு வெளியாகும் அறிவிப்புள் அமெரிக்கா தன்னுடைய வட்டி விகிதத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாது என்றே கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்கா தன்னுடைய வட்டியை உயர்த்தினால் உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தை விற்றுவிட்டு அதிக லாபம் தரும் அமெரிக்க அரசு பத்திரங்களை நோக்கி ஓடுவார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறையும்.

இதையும் படியுங்க  பழைய கார்களுக்கு ஆப்பு… மைலேஜும் போச்சு..! E20 பெட்ரோல் VS மின்சார வாகனங்கள்: இந்தியா எதை நோக்கி நகர வேண்டும்?

ஆனால் இன்று வடிவிகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு மிக குறைவு என்பதால் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை குறையாமல் லேசாக உயர்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை நிரூபிக்கும் விதமாக நேற்றைய தினமே சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1% உயர்ந்து காணப்பட்டது. ஆனால் தங்கத்தின் விளையில் உண்மையான மாபெரும் டெஸ்ட் இந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டாம் தேதிதான் நடக்க போகிறது.

silver

அமெரிக்காவில் கச்சா விலை குறைந்தாலும் பணவீக்கம் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராததால் டிசம்பர் மாதம் நடக்கும் ஃபெடரல் கூட்டத்தில் வட்டி விகதத்தை அவர்கள் அதிரடியாக உயர்த்த 83% வாய்ப்பு உள்ளது. அப்படி ஒருவேளை டிசம்பரில் வட்டி உயர்த்தப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து நம் ஊரில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும். எனவே நீங்கள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் தங்கம் வாங்க நினைத்தால் இன்று இரவு அமெரிக்கா என்ன சொல்ல போகிறது என்பதையும் டிசம்பரில் வரப்போகும் அந்த மாபெரும் விலை வீழ்ச்சியையும் கருத்தில் கொண்டு மிகவும் உஷாராக செயல்படுவது நல்லது.

இதையும் படியுங்க  Cargo industry welcome foreign investment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 minutes ago at 51 minutes ago