Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Karuppu Muruganantham

தமிழக பாஜகவில் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் தஞ்சையை சேர்ந்த கருப்பு முருகானந்தம். கட்சியில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது பெண்மணி ஒருவர் தமிழக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் டெல்லி, சென்னை, கொடைக்கானல் என பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்து சென்றிருக்கிறார்.

கல்யாணம் செய்து கொள்வதாகவும் எனக்கு வாக்கு கொடுத்தார். ஆனால் இப்போது கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுகிறார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு பிறகு பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு.M.முருகானந்தம் அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  விஜய் அமைச்சரவையில் விசிக..!? திமுக முட்டுக்கட்டையை உடைத்தெறியும் திருமா..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago