lingamalai

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தும் அதை ஆண்ட திமுக அரசும் சரி, ஆளும் தவெக அரசும் சரி அதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் இதே நிலைமை மற்றொரு கோவிலுக்கும் வந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள லிங்கமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்திருக்கிறது. இது மன்னர் அழகிய மணவாள தேவன் கட்டிய கோவில். சோழர்கால வரலாற்று சான்றுகளாக அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை, பழமையான மண்டபம், குன்றுகள் அமைந்திருப்பது, அரசு ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல தலைமுறையாக பொதுமக்கள் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.

கோவிலின் தொன்மை கல்வெட்டுகளை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. லிங்கமலை உச்சியில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைத்ததாகவும் குளத்தூர் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான பேச்சில் சிலுவை சட்ட விரோதமானது. இது இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் மதமோதலை உருவாக்கும் செயல் என கூறப்பட்டது. மேலும் சிலுவையில் எந்த பராமரிப்பும் செய்யக்கூடாது. சிலுவை அகற்றப்பட வேண்டும் என்றும் வருவாய் துறை, காவல்துறை அனுமதி இல்லாமல் இரு தரப்பினரும் அங்கு எந்த ஒரு செயலும் செய்யக்கூடாது என்றும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  திருப்பரங்குன்றத்தில் பதற்றம்..! அந்த பொருட்களுடன் சென்ற தர்கா நிர்வாகிகள்..! திருப்பி அனுப்பிய போலீசார்..!

ஆனால் கிறிஸ்தவர்கள் சில நாட்களுக்கு முன்னர் சிலுவையை பராமரித்து பாதையை சுத்தம் செய்தபோது பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் சிவன் கோவில் லிங்கமலை உள்ளே அத்துமீறி நுழைந்து அங்குள்ள தொன்மையான கல்வெட்டுக்களை உடைப்பது, பாதையை மறைப்பது போன்று செயல்கள் நடந்தன. லிங்கமலை என்ற பெயரை சவேரியார் மலை என மாற்றும் முயற்சி இன்றளவும் நடக்கிறது.

இவை அனைத்தும் மலையை ஆக்கிரமிக்கும் செயலாக தெரிகிறது. அப்பகுதியில் பிரச்சனையை தூண்டி மதமோதலை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மேலும் லிங்கமலையில் அரசு மற்றும் ஆர்டிஓவின் தடை உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு கிறிஸ்துவ அமைப்பினர் அத்து மீறி நுழைந்ததும், அங்கு சட்ட விரோதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதை தட்டிக்கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து மீது கொடூர தாக்குதலை நடத்தியதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே காலங்காலமாக போற்றி பாதுகாக்கப்பட்ட தொன்மையான வழிபாட்டு தளங்கள் மீது திட்டமிட்டு ஆக்கிரமிப்புகள் நடத்தப்படுவதும் மத மோதல்கள் தூண்டப்படுவதும் நாளுக்கு நாள் பெருகி விட்டன என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாத சர்ச் மற்றும் மசூதிகளுக்கு பட்டா வழங்கப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியிருக்கும் நிலையில் இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதையும் படியுங்க  ரூ.10 கோடிக்கு ஸ்கெட்ச்… தென்ஆப்பிரிக்கா தங்க வேட்டையில் வீழ்ந்த சிங்கப்பூர் இன்ஜினியர்!

குறிப்பாக இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் எங்கே சென்றார்? பேட்டி கொடுக்க ஓடோடி வரும் ரமேஷ் அவர்களே எங்கே என கேள்விகள் எழுப்பி இருக்கிறார்கள். சபாநாயகர் முதல் முதல்வர் முக்கிய அமைச்சர்கள் வரை அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் தவெகவிந் சிறுபான்மையின அரசு, இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியும் குரல் கொடுக்காது என்ற இலக்காரமா? என நையினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து ஒருதலைவற்றமாக செயல்படும் காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் ஜோசப் விஜய் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அரசு உத்தரவை மீறி தாக்குதல் நடத்திய உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டமைப்புகளை அகற்றி சிறைபடிக்கப்பட்டுள்ள அப்பாவி பக்தர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். நீதியை நிலைநாட்ட தவறி தொடர்ந்து மத பாரபட்சத்துடன் செயல்பட்டால் தவெக அரசு தமிழக மக்களின் கடும் கொந்தளிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படியுங்க  "ரூ. 1 கோடி வாங்கியும் அடங்காத பேராசை! 6 மாத பயிற்சிக்கு ரூ. 12.5 லட்சம் கேட்ட சவீதா கல்லூரி… தமிழக அரசின் அதிரடி ‘ஆக்ஷன்’ ஆரம்பம்!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *