ஜெம் கிராணைடு வீரமணியின் ‘பயணங்கள் பாடங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் ஆவடி நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
அகல் விளக்கு பதிப்பகம் தொடர்பான பல சர்ச்சையான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் பல நூல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவரங்களும் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜெம் வீரமணியின் பயணங்கள் பாடங்கள் என தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் ஆவடி நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது புத்தகம் குறித்தான சர்ச்சைகள் அதிகமாக எழுந்து வரும் நிலையில் ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணியின் குறித்ததான புத்தகம் ஒன்று இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத்தில் இலக்கிய தமிழ் என்ற பிரிவில் இந்த புத்தகம் இடம் பெற்றுள்ளது அதில் ஜெம் வீரமணியின்
‘பயணங்களும் பாடங்களும்’ என்னும் தலைப்பில் இந்த புத்தகம் அங்கு இடம் பெற்றுள்ளது.
இதில் அவர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தது குறித்தும் அவருடைய பயண அனுபவங்கள்குறித்தும் அவர் அதில் பகிர்ந்துள்ளதாக ராணி மெயகாந்தன் என்பவர் புத்தகத்தை எழுதியுள்ளார். ராணி மெயகாந்தன் ஜெம்
வீரமணியின் நண்பர் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர் பல்வேறு நாடுகளுக்கு தனது கிரைனைட் தொடர்பான வியாபாரத்துக்கு சென்றபொழுது அவர் சந்தித்த அனுபவங்கள், அங்கு சந்தித்த மனிதர்கள் உள்ளிட்ட பலவகை புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக அவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டில் கால்பந்து போட்டிகளை கண்டு கழிப்பது, தான் அமைத்த தன்னுடைய நிறுவனம் சார்பாக அமைக்கப்பட்ட அந்த கிரானைட் பதிப்புகளை முன்னின்று புகைப்படம் எடுப்பது உளிட்ட பல்வேறு புகைப்படங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது. தற்போது குற்றவாளியாக சிறையில் இருக்கும் ஜெம் வீரமணி குறித்த புத்தகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கவனக்குறைவு யாரால் ஏற்பட்டது? இது வாங்கிய நிலையில் தற்போது அது சரி பார்க்கப்பட்டதா? என
பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
