Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vs babu

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வீழ்த்தி அரசியல் அரங்கை அதிரவிட்டார். பின்னர் வி.எஸ்.பாபு ஸ்டாலினின் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டியதன் மூலம் தான் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானார். முன்னாள் முதல்வரை வீழ்த்தியது மட்டுமல்லாமல் சீனியர் என்பதால் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வி.எஸ்.பாபுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வி.எஸ்.பாபுக்கு கடந்த 9ம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில்: சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதுடன், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்க  திமுக ஒரு நச்சுப்பாம்பு..! தவெக கூட்டணிக்கு முன்பே வைகோ-வுக்கு செவிட்டு அடி..! அறிவாலயத்தின் பயங்கர ஸ்கெட்ச்..!

இந்நிலையில் தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர்களும் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago