Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Drugs

இனி போதை விற்றால் குண்டர் சட்டம்தான்!” – மாவட்டமே அதிரும் அளவுக்கு கர்ஜித்தார் எஸ்.பி. அக்‌ஷய் அனில் வாக்ரே !

திருப்பத்தூர் மாவட்டத்தை போதைப் புழக்கத்தின் பிடியிலிருந்து மீட்க, மாவட்ட காவல்துறை நவம்பர்- 3 அதிகாலை  அதிரடி வேட்டையில் இறங்கினர் 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரேவின் உத்தரவின் பேரில், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உட்கோட்டங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வேட்டையாட 50 – தனிப்படைகள்‌ அமைக்கப்பட்டன இதற்காக  நேற்று அதிகாலை 5 மணிக்கே அனைத்து காவல்துறையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் களத்தில் இறங்கினர்.

அப்போது . திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் பஸ் நிலையங்கள் . ரயில் நிலையங்கள், மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகள், பதுக்கல் கிடங்குகள் என மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டு சலித்த போலீஸாருக்கு 

முடிவில் காத்திருந்தது அதிர்ச்சி.   5 கிலோ கஞ்சா, 21 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் 

இதையும் படியுங்க  மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் `செக்' - சூடாகும் திருப்பத்தூர் திமுக !

நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக எஸ்.பி. அக்‌ஷய் அனில் வாக்ரே கூறுகையில் 

இந்த வேட்டையின் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 69 – பேரை மடக்கிப் பிடித்தோம் அவர்களை  காவல் நிலையங்கள் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் . முடிவில் 10- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில், 9 பேரை கைது செய்து இருக்கிறோம் 

மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து  தேடி வருவதாகவும் “இனி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் “குண்டர் சட்டம் பாயும்!” என கடும் எச்சரிக்கை விடுத்தார் 

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிரான திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால்  பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 minutes ago at 25 minutes ago