Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தி.மு.க. ஆட்சி முடிந்து த.வெ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வந்துள்ளார் செந்தில் பாலாமுன்னாள் அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியம். அந்த வகையில், செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு அமலாக்கத் துறை கடந்த மே 15-ம் தேதி கடிதம் எழுதியது. அதன்பேரில், ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியதை அடுத்து, ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார். இந்த விவகாரம்தான் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படியுங்க  இலை உதிர் காலம்.. கதறும் அதிமுக! திமுகவில் இணைந்த பெஞ்சமின்; அடுத்த விக்கெட் யார்?

முன்னாள் அமைச்ச்ர செந்தில் பாலாஜியைப் போலவே அனிதா ராதாகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபொழுது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்திருந்தது.

அந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் அந்த வழக்கானது நிலுவையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடந்த 2020ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அனுமதிக் கோரி கடந்த திமுக அரசிடம் அமலாக்கத்துறை பல முறை கடிதம் எழுதியதாகவும், அதற்கு அப்போது இருந்த திமுக அரசு அனுமதி தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  திமுகவின் 20 லட்சம் கோடி சவால்..! லஞ்சப் பணத்திற்கு பொறி..! விஜய் போடும் மாஸ்டர் பிளான்..!

இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது கடந்த மே மாதம்!

ஏற்கனவே, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பிடியில் சிக்கியிரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காண்டிராக்டர்கள் தங்கம், குட்டி ஆகிய இருவரால் மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தூத்துக்குடி உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘ அ.தி.மு.க.வைச் சேர்ந்த காண்டிராக்டர் தங்கம். அதே போல் பி.ஜே.பி.யைச் சேர்ந்த காண்டிராக்டர் குட்டி. இவர்கள் இருவரை மீறி அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனிடம் வேறு யாரும் காண்டிராக்ட் எடுக்கவே முடியாது. அமைச்சரின் அதிகாரப் பூர்வ உதவியாளர்களாக இருப்பவர்களுக்குக் கூட டெண்டர் போன்றவற்றில் தலையிட முடியாது. ஆனால், அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனிடம் தங்கமும், குட்டியும்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் பலநூறுகோடி ரூபாய் டெண்டரில் ஊழல் முறைகேடு புகார்கள் நடந்ததாக தற்போதைய அரசுக்கு சில ஆவணங்களுடன் புகார்கள் பறந்திருக்கிறது.

இதையும் படியுங்க  "பாவம் திமுக..! அடிச்சு ஓட ஓட விரட்டி இருக்கிறார் CM விஜய்..!'' பொளந்து கட்டிய தமிழிசை..!

கட்சி நிர்வாகிகளைக்கூட இந்த இருவரும் மதிப்பதில்லை. அமைச்சரும் இவர்களை துளிகூட கண்டித்ததில்லை. இதனால் கட்சி நிர்வாகிகளே பெருமளவில் இவர்கள் இருவர் மீது கோபத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், காண்டிராக்டில் நடந்த முறைகேடுகளை அப்படியே ஆளும் கட்சிக்கு புகார்களாக தட்டிவிட்டிருக்கின்றன. இந்தப் புகார்கள் குறித்து ஆளும் கட்சி தூசு தட்டவும் தயராக இருக்கிறது’’ என்றனர்.

ஆக மொத்தத்தில், செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago