Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Velumani

தமிழக அரசியல் களம் தற்போது பனையூரை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. “வீழ்ந்துவிடக் கூடாது அதிமுக” என்று எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வியூகங்கள் வகுத்து, இடைத்தேர்தல் களத்திற்கு ‘ரூட் லிஸ்ட்’ தயார் செய்து கொண்டிருந்தாலும், அவரது சொந்தக் கோட்டையிலேயே மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியைத் தக்கவைக்க இபிஎஸ் போராடும் அதே வேளையில், கொத்தாகப் பல முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பனையூர் வட்டாரத்தில் இருந்து கசியும் அந்த ‘7 முக்கிய விஐபிக்கள்’ யார் யார் என்ற விவாதம் தான் இன்றைய டாப் அரசியல் ஹாட் டாபிக்.

இபிஎஸ்-ஸிற்கு விழுந்த பலத்த அடி
அதிமுகவின் நிதியாதாரமாகவும், கொங்கு மண்டலத்தின் தூண்களாகவும் பார்க்கப்படும் எஸ்.பி.வேலுமணி குரூப், அண்மைக்காலமாக இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இபிஎஸ்-ஸுடன் மீண்டும் இணைந்த வேலுமணி குரூப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு, அவர்கள் முன்பு வகித்த முக்கியப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்க மறுத்ததே இந்த ஒட்டுமொத்தப் பூகம்பத்திற்கும் காரணம்.

இதையும் படியுங்க  அதிமுகவில் இருந்து 'மேலும்' 4 எம்.எல்.ஏ-க்கள் அவுட்..? ஆனாலும், விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை!

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தவெக தலைமை, அதிமுகவின் அசைக்க முடியாத விஐபிக்களுக்கு வலைவீசி இழுக்கும் ‘சைலண்ட் ஆபரேஷனை’ கச்சிதமாக முடித்துள்ளது. மொத்தமாகச் சென்றால் தேர்தல் கமிஷன், சட்ட சிக்கல்கள் எழும் என்பதால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஒவ்வொருவராக அடுத்தடுத்து தவெக-வில் இணைய இந்த விஐபிக்கள் வியூகம் வகுத்துள்ளனர்.

தவெக ரேடாரில் ‘7 விஐபிக்கள்’ யார்?
பாலக்கோடு கே.பி.அன்பழகன், எஸ்பி வேலுமணியின் மிக நெருங்கிய வட்டாரம், இபிஎஸ்-ஸின் தற்போதைய போக்கால் அதிருப்தி .கே.சி. வீரமணி. திருப்பத்தூர் / வேலூர் வட மாவட்டங்களில் செல்வாக்குமிக்க முன்னாள் அமைச்சர். தவெக-வின் அழைப்பை ஏற்று நகரத் தயார்.சி.வி. சண்முகம். விழுப்புரம் வட தமிழகத்தின் அதிரடி முகம். எஸ்பி வேலுமணி எடுக்கும் இறுதி முடிவிற்காகக் காத்திருப்பதாகத் தகவல். எஸ்பி வேலுமணி,கோவை. இவரே இந்த அதிருப்தி குரூப்பின் மையப்புள்ளி. இவர் எடுக்கும் முடிவே சி.வி. சண்முகம் போன்றோரின் அடுத்த கட்டம். வேலுமணி மற்றும் அன்பழகன் வழிகாட்டுதலின்படி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் துணிந்தவர்கள்.

இதையும் படியுங்க  திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

அதிமுக கோட்டையில் தவெக போடவிருக்கும் இந்த மாபெரும் ‘ஹைடெக் ஸ்கெட்ச்’ மற்றும் ராஜினாமா படலம் முன்கூட்டியே கசிந்ததால் தான், அதிமுகவின் சீனியர் தலைவரான ஆர்.பி. உதயகுமார் பதற்றமடைந்து ஒரு வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.”12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்” என்று அவர் வெளியிட்ட வீடியோவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரை ராஜினாமா செய்ய வைத்து, அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலைக் கொண்டுவர தவெக திரைமறைவில் காய் நகர்த்துகிறது என்பதைத்தான் அவர் மறைமுகமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

இபிஎஸ்-ஸிற்கு அக்னிப் பரீட்சை
முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினால், அது அதிமுகவிற்கு மீள முடியாத பலவீனத்தை ஏற்படுத்தும். தவெக விரித்துள்ள இந்த பனையூர் வலையில் இருந்து தனது ‘டாப் விஐபிக்களை’ எடப்பாடி பழனிசாமி எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறார்? அல்லது அவர்கள் கேட்ட பதவிகளைக் கொடுத்து சமரசம் செய்வாரா? தமிழக அரசியல் களம் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய ராஜினாமா படலங்களையும், அதிரடி அரசியல் மாற்றங்களையும் சந்திக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி! பனையூர் கேட் யாருக்காக முதலில் திறக்கப் போகிறது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்க  "வெள்ளை அறிக்கை சாக்குப்போக்கு வேண்டாம்!" – தவெக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த அக்னி எச்சரிக்கை!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago