”உதயநிதிக்கு இரத்தமெல்லாம் சூடேறி, சித்தம் கலங்கி பித்தம் தலைக்கு ஏறி போனதாக” தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எனது பெயர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர். 10ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாடுடைய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன். இன்று காலை தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஆண்மை சிங்கம் தளபதி ஆற்றிய பேருரையை கேட்டு எதிர்கட்சிகள் உடலில் இருந்த இரத்தமெல்லாம் சூடேறி, சித்தம் கலங்கி பித்தம் தலைக்கு ஏறி எதிர்கட்சி தலைவர் ஒன்றை சொல்லி இருக்கிறார். கு.ப.கிருஷ்ணன் மீது ஈடி வழக்கு இல்லையா என்று கேட்டிருக்கிறார். நான் அவரை ஒன்றை கேட்க ஆசைப்படுகிறேன்.
நீங்கள் அரசியல் ஆண்மை உள்ளவராக இருந்தால் என் மீது ஈடி வழக்கு இருக்கிறது என்பதை நிரூபியுங்கள். நான் அரசியல் வாழ்க்கையிலே விட்டு ஓடி போய் விடுகிறேன். தயாரா? ஆக குற்றச்சாட்டுகளை பொய்யான புகழுரையை இதே இடத்திலே 1எதிர்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். என் மீது எந்த வழக்கும் இல்லை. ஈடியும் இல்லை. வேறு எந்த மத்திய மாநில அரசினுடைய வழக்கும் இல்லை. ஆனால் என்னை சீண்டி அழைத்திருக்கிறார். அவருக்கு பதிலுரையாக ஒன்றை சொல்லுகிறேன்.

முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள். ஐயா நீங்க வேளாண்றை அமைச்சரா இருந்தப்போ உங்க மேல வந்து வருமானம்
பதிவு பண்ணிருந்தது. அதான் அதைத்தான் நானும் இப்ப விளக்கமாக சொல்லுகிறேன். 1991- 96லே நான் வேளாண்மை துறை அமைச்சராக மரியாதைக்குரிய எங்க அம்மையாருடைய ஆட்சியிலே இடம் பெற்றிருந்தேன். என் மீது சொத்து குவிப்பு வழக்கை உங்கள் தாத்தா அவர்கள் போட்டார்கள்.
நீதிமன்றத்தை சந்தித்து மூன்றாண்டு காலம் வழக்கை நடத்தி குற்றமற்றவன் என்று வெளியே வந்திருக்கிறேன். இந்த வரலாறு உங்களுக்கு யாருக்கேனும் இருக்கிறதா? அல்லது நீதிமன்றத்திலே நீங்கள் போய் மனு போட்டு எங்களுடைய வழக்கை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று கு.ப.கிருஷ்ணன் எங்கேயாவது கேட்டிருக்கிறானா? இல்லை. வழக்கை சந்தித்துநிரபராதி என்ற தீர்ப்பை பெற்று 15 ஆண்டு கால ஆட்சிக்கு பின்னால் இன்றைக்கு இந்த இடத்திலே நிற்கிறேன்.
எனவே எதிர்கட்சி தலைவர் அவர்களே நீங்கள் எனது பெயரை இங்கே குறிப்பிட்டதை போல சட்டமன்றத்திலே குறிப்பிடவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன். அங்கே குறிப்பிட்டிருந்தால் உங்களுடைய பேச்சு அரசு பதிவேட்டிலே ஏற்றப்பட்டிருக்கும். அதை ஆதாரமாக கொண்டு உங்கள் மீது நான் வழக்கு தொடுத்திருப்பேன். தப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த மடையனாவது படத்தை ஆத்திலே போட்டது உண்டா? இல்.லை அந்த படத்தை எடுத்த புத்திசாலி யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள். எந்த இடத்திலே இருந்து அவர் குற்றச்சாட்டை சொன்னாரோ அதே இடத்திலே இருந்து நான் மறுக்கிறேன்.
திருச்சிராப்பள்ளியிலே ஒன்பது சட்டமன்ற தொகுதி இருக்கிறது. அதிலே ஒரு காலத்திலே திமுக வெற்றி பெற்றது உண்டு. ஆனால் இப்பொழுது ஆறை நாங்கள் பிடுங்கி இருக்கிறோம். திமுகவுக்கு கிடைத்தது இரண்டு. அந்த பொறாமையிலே அவர்கள் சொல்லி இருக்கலாம். இது எங்களுடைய தளபதி தொகுதி. அவர் நின்ற தொகுதி. வென்ற தொகுதி. அவருடைய பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்வேன்” என சவால் விடுத்துள்ளார்.
