Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தேனி மாவட்டத்தில் தவெக-வில் உட்கட்சி மோதல், அதிருப்தி தற்பொழுது வெட்டவெளிச்சத்திற்கு வந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தேனி மாவட்ட உணவுக் கிட்டங்கிகளில் மேற்கொண்ட அரசு அதிகாரப்பூர்வ ஆய்வின் போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஷ்ரா கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டிக்கும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஷ்ராவிற்கும் இடையே நிலவி வரும் தீவிரமான உட்கட்சிப் பூசலே இந்த புறக்கணிப்பிற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

“ஆந்திராவை அதிரவைத்த கொரோனா: அலர்ட் மோடில் சுகாதாரத்துறை.. உடனே வெளியான அவசர உத்தரவு!

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.வைத்திநாதன் முன்னிலையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடந்து நடைபெற்ற இந்த ஆய்வு உத்தமபாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக் கிட்டங்கியில் அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஷ்ரா ஆய்வில் கலந்து கொள்ளவில்லை.

இதையும் படியுங்க  லிஃப்ட் கொடுத்த விஜய்..! அறிவாலயத்தின் புதிய பவர் சென்டர்..! உதயநிதிக்கு வழிகாட்டும் ‘அத்தை..!

தான் வெற்றி பெற்ற தொகுதியை விடுத்து திமுக வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிக்குள் சென்று சுருளி அருவி, கூடலூர் பகுதிகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஷ்ரா தனது சொந்த தொகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததன் மூலம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டிக்கும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஷ்ராவிற்கும் உள்ள உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜெகநாத்மிஷ்ரா லெப்ட்பாண்டி மூலம் கட்சியின் தலைமைக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். ஜெகநாத்மிஷ்ரா கம்பம் சட்டமன்ற உறுப்பினராக அறிமுகம் செய்யபட்ட போது லெப்ட் பாண்டியின் ஆதரவாளர்கள் மற்றும் தவெக கட்சி உறுப்பினர்கள் கம்பம் தவெக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

தற்போது தேனி மாவட்டத்தில் தவெக கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பு வேண்டும் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஷ்ரா தலைமைக்கு அழுத்தும் கொடுத்ததாகவும், ஆனால் தலைமை இதற்கு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் அறிமுகம் செய்பட்டபோது ஜெகநாத் மிஷ்ரா வைத்த பேனர்களில் இடம் பெற்ற லெப்ட் பாண்டியின் புகைப்படம் தற்போது பதவி கிடைக்காத விரக்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வுகளில் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியின் புகைப்படம் பேனர்களில் இடம் பெறவில்லை. இதன் மூலம் உட்கட்சி பூசல் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதையும் படியுங்க  அறிவாலயத்தில் மெகா 'ஆபரேஷன்'..! திமுக எடுத்த அதிரடி முடிவு..! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்..!

“படிப்பில் ரேங்க் ஹோல்டர்.. நடிப்பில் தனுஷ் சாய்ஸ்! வட சென்னையைக் கொண்டாடும் ரம்யா ரங்கநாதன்!”

தற்போது தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட்பாண்டி, அமைச்சர் நிகழ்வில் கலந்து கொண்டதை தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஷ்ரா அமைச்சர் நிகழ்வை புறக்கணித்த சம்பவத்தின் மூலம் இருவருக்கும் இடையே உள்ள உட்கட்சி பூசல் தற்பொது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

-முத்துவெளியப்பன், தேனி மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago