Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியலில் அஸ்திவாரத்தையே அதிர வைக்கும் ஒரு செய்தி இப்போது அறிவாலயம் வட்டாரத்தில் இருந்து கசிந்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்த திராவிட முன்னேற்ற கழகம் இப்போது தன்னை முழுமையாக செதுக்கிக் கொள்ள ஒரு மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் அக்குவேறு, ஆணிவேராக ஆராயப்பட்டு ஒரு மிகப்பெரிய உட்கட்டமைப்பு அறுவை சிகிச்சைக்கு திமுக தயார் ஆகி வருகிறது.

உள்முக புலணாய்வு அறிக்கைகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தந்துள்ளன. பல மாவட்டங்களில் உள்ளூர் தலைவர்களின் அலட்சியம், உட்க்கட்சி பூசல்கள் மற்றும் புதிய அரசியல் சக்திகளின் எழுச்சியை சரியாக கணிக்க தவறியதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 30 முதல் 35 மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்ற ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். மூத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய அனைவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டு இளமையான மற்றும் துடிப்பான தலைவர்களுக்கு மாவட்ட பொறுப்புகளை வழங்க தலைமை முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்க  பல்ஸ் பார்த்தாச்சு..! தவெக-வேண்டாம்.! சுயேச்சையாக கெத்து காட்டப்போகும் விஜயபாஸ்கர்..!

இது ஒரு பக்கம் இருக்க கட்சியின் உச்ச தலைமையிலும் ஒரு மிகப்பெரிய அதிகார பகிர்வு நிகழப்போவதாக தெரிகிறது. நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கும் கனிமொழி கருணாநிதிக்கு செயல் தலைவர் போன்ற ஒரு மிக வலிமையான பொறுப்பை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இளைஞரணி முகமாக இருக்கும் நிலையில் கனிமொழியின் டெல்லி அரசியல் அனுபவம் மற்றும் பெண்கள் மத்தியிலான செல்வாக்கை பயன்படுத்தி கட்சியை மீண்டும் பலப்படுத்த தலைமை விரும்புகிறது.

ஸ்டாலின் தற்காலிகமாக பின்னணியில் இருந்து வழிகாட்ட, உதயநிதி மற்றும் கனிமொழி இருவரும் இணைந்து கட்சியை ஒரு இரட்டை குடல் துப்பாக்கி போல வழி நடத்தும் புதிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பழைய அரசியல் முறைகளை மாற்றி புதிய தலைமுறை வாக்காளர்களை இயக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் திமுக செயற்குழு அல்லது பொது குழுவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். திமுகவில் இந்த அதிரடி மறு சீரமைப்பு தமிழக அரசியலில் மீண்டும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்க  எடப்பாடிக்கு நோ… ஸ்டாலினிடம் பம்மல்..! விஜய்யின் டபுள் கேம்..! பகீர் பின்னணி..!

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago