Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா வெற்றிகரமாகச் சோதித்தது. இந்த ஏவுகணை எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் குறிவைத்து சோதிக்கப்படவில்லை என்றும், இது வழக்கமான சோதனையே என்றும் சீன ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற ஏவுகணை சோதனைகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சீனா அதற்கு நேர்மாறாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனா பங்கேற்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு இணங்க, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் டாமி பிகாட் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  வெறும் 1 டாலருக்கு ஒரு வீடு! அமெரிக்காவில் ஏன் இவ்வளவு மலிவு?

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago