Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்முருகன் (48). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆண்டு விவாகரத்தான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வேல்முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 21 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் 21 வயது மகள் தனது இரண்டாவது தந்தையை பற்றி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது தாய் 2010ம் ஆண்டு முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு 2012ம் ஆண்டு காவலர் வேல்முருகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனக்கு 17 வயது இருக்கும் போது இரண்டாவது தந்தையான வேல்முருகன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக வேல்முருகன் தொடர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் தான் கருவுற்றதாகவும், 2022 டிசம்பர் மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வேல்முருகன் கருவை கலைத்தாக புகாரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இது குறித்து வெளியே சொன்னால் உன் தாயையும், அண்ணனையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறிய படி கூறியிருந்தார்.

இதையும் படியுங்க  ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் அமைச்சரின் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.! ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!

இந்த புகாரின் பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் காவலர் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவலர் வேல்முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மனைவியின் மகளை 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago