Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அதிமுக-விலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கட்சி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு தற்பொழுது பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் இதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டிருக்கிறார். சி.விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவருக்கு தற்போது புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

vijay

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு பர்வேஸ் மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய நிலையில் அங்கு புதிதாக இணைந்தவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் தற்பொழுது விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று எம். ஆர். விஜயபாஸ்கருக்கு தற்போது கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பொறுப்பும், அதேபோன்று
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்த நிர்வாகிகளுக்கும் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மரகதம் குமரவேலுக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும், நாங்குநேரியை சேர்ந்த ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் தற்பொழுது துணை
பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  "ஒரே மாதத்தில் ₹12,000 கோடி கடன்! வட்டி கட்டவே காலியாகும் கஜானா? தள்ளாடுகிறதா தமிழக அரசு!"

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு எப்பொழுது பொறுப்புகள் வழங்கப்படும் என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர்களுக்கான இந்த பொறுப்புகளை தற்பொழுது விஜய் அறிவித்திருக்கிறார். இன்னும் ஒரு சிலருக்கு பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago