Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tamil Nadu Governme

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டம்-ஒழுங்குப் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு
செய்தார். இருப்பினும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கள அளவில் பல சவால்கள் நிலவுவதாகக் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற தவெக ஆட்சியின் கடந்த மூன்று மாத காலத்தில், சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முந்தைய ஆட்சிக் காலத்தை விட திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் 15% வரை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தவெக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் திருட்டு, வழிபறி சம்பவங்கள் முந்தைய ஆட்சியை விட 15% அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம் புழக்கம் அதிகமாக இருந்தது என்றால் இப்போது அதையும் தாண்டி போதைப் பொருட்கள் புழக்கம் ரொம்பவே அதிகரித்து இருக்கிறது.

ஆனால். இதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் இதை கண்டும், காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயர் அதிகாரிகள் தவிர கீழ்மட்ட போலீசாருக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். சஸ்பென்ட் மெமோ என இந்த உயர் அதிகாரிகள் மேலிடத்தை திருப்தி படுத்துவதற்காக எடுக்கிற அந்த நடவடிக்கைகளால் போலீசாருக்கு நம்பிக்கை போய் விட்டது. எதுக்கு வம்பு என குற்றவாளிகளை ரொம்ப மென்மையாவே கையாள்கிறார்கள்.

இதையும் படியுங்க  495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்… ஆனால் மாணவன் உயிரிழந்த சோகம்

இதனால்தான் போதைப் பொருள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது என போலீஸ் தரப்பிலேயே வருத்தப்படுகிறார்கள்.

அரசியல் சலசலப்புகளையும், உயர் அதிகாரிகளின் சுயநலப் போக்குகளையும் விட்டுவிட்டு, காவலர்களுக்கு உரிய பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் வழங்கி, போதைப்பொருள் மற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago