Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rajinikanth’s Movie Actress

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ரச்சிதா ராம், தனது 34-வது பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் தனது வீட்டின் முன்பு நள்ளிரவில் ரசிகர்களை நேரில் சந்தித்தார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகையுடன் செல்ஃபி எடுத்துவிட்டு எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தைக் கிள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி ரச்சிதா ராமின் 34-வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் பாகுபலி படத்தின் காட்சிகளைப் போன்ற பிரம்மாண்டமான கட்அவுட் ஒன்றை அமைத்து, கிரேன் மூலம் அதற்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து திருவிழா போல கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே ரசிகர்களை நேரில் சந்தித்த ரச்சிதா ராமுடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துள்ளார்.

செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது முதலில் ரச்சிதா ராமுடன் அந்த ரசிகர் கை குலுக்கியுள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில், அடுத்த நொடியே அவரது கன்னத்தைக் கிள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதையும் படியுங்க  "கைக்குட்டை இல்லையா ? மேனேஜர் துப்பட்டாவை வாங்கிய ஷாருக்கான்... நெட்டிசன்களின் கலாய்ப்பு கமெண்ட்ஸ்!

இந்தத் திடீர் செயலால் ரச்சிதா ராம் சில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பின்னர் சுதாரித்துக்கொண்டு வெட்கப்பட்டு சிரித்தபடி தனது முகத்தை கைகளால் மூடிக்கொண்டார். அவரது இந்த ரியாக்ஷன் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கூட்டத்தில் இருந்த மற்றொரு ரசிகரும் ரச்சிதா ராமின் அருகில் வந்து அவரது கன்னத்தைத் தொட முயன்றதாகவும், பின்னர் அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் சற்று பதற்றமடைந்த ரச்சிதா ராம், அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, “தயவுசெய்து என்னைத் தொடாதீர்கள்” என்று அன்பான அதேநேரத்தில் கண்டிப்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கிருந்தவர்களும் அந்த ரசிகரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களில் பிரபலங்களைச் சந்திக்கும் ரசிகர்கள் அவர்களின் தனிப்பட்ட எல்லை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடிய அந்த ரசிகர் யார் என்பதையும் பலர் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர். சிலர் அவரை “அதிர்ஷ்டசாலி ரசிகர்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  அனிருத் -காவ்யாவின் திருமணத் தேதி இதுதான்… எந்த நாட்டில் தெரியுமா..?
Rajinikanth’s Movie Actress

ரச்சிதா ராம் தனது அழகான கன்னக் குழிகளுக்காக ரசிகர்களால் ‘டிம்பிள் குயின்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாகவே அந்த ரசிகர் அவரது கன்னக் குழியைக் குறிவைத்து கிள்ளிவிட்டு ஓடியதாகவும், வேறு சில இடங்கள் இருந்தும் குறிப்பாக கன்னத்தைத் தேர்வு செய்திருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரச்சிதா ராமிடம் கன்னட ஊடகங்கள் கேட்டபோது, ரசிகர் மீது கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலளித்துள்ளார். ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாகவே அந்தச் சம்பவத்தைப் பார்ப்பதாகக் கூறிய அவர், தன்னை ஒரு குழந்தையாக நினைத்து தனது கன்னத்தைக் கொஞ்சியதாகவும், ரசிகர்கள் காட்டும் இந்தத் தூய்மையான அன்பை தான் எப்படி தட்டிக்கழிக்கவோ அல்லது கண்டிக்கவோ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோவை தமிழ் மற்றும் கன்னட மீம் கிரியேட்டர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எடிட் செய்து வருகின்றனர். வடிவேலுவின் நகைச்சுவை ஆடியோக்கள் மற்றும் பிரபலமான ட்ரெண்டிங் பாடல்களைப் பின்னணியில் சேர்த்து ‘Bujuku Bujuku’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான வேடிக்கையான எடிட் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய சம்பவம் தொடர்பான காட்சிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதையும் படியுங்க  "வெற்றிக்கு பின்னால் 'சூர்யா'… பெருமைக்கு பின்னால் 'விஜய்'… ஆர்.ஜே.பாலாஜிக்கு நெட்டிசன்கள் கண்டனம்!"

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரச்சிதா ராம், ரசிகர்களால் ‘டிம்பிள் குயின்’ என்று அழைக்கப்படுவதுடன், தமிழில் ஒளிபரப்பான பிரபல ‘நந்தினி’ தொடரில் நடித்த நடிகை நித்யா ராமின் உடன்பிறந்த சகோதரியும் ஆவார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்திலும் ரச்சிதா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த சூழலை ரச்சிதா ராம் கையாண்ட விதமும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago